பக்கம்:ஒரே இரத்தம்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்று வந்துவிடுவான்; கட்டப்பட்ட குடிசையைப் பார்த் துக் களிப்படைவான் என்று எதிர்பார்த்தவாறு மாரியும், பொன்னனும், நந்தகுமாரும் அந்தப் புதிய குடிசையின் வாசலி லேயே இரவு எட்டு மணி வரையில் காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் மகேஸ்வரன் வரவில்லை. மாரி; நந்தகுமாரைப் பார்த்து, "நாங்க இங்கே இருக்கோம். நீ வீட்டுக்குப் போயி அக்காவுக்குத் துணையா இரு! செங்கமலம் தனியா உக்காந்து அம்மாவை நினைச்சு அழுதுகிட்டு இருக்கும்” என்று கூறினார். நந்தகுமார், தந்தையின் வார்த்தையைத் தட்டாமல் வீட்டுக்குச் சென்றான். பூட்டப்பட்டிருந்த வாசல் கதவைப் பார்த்துத் திடுக்கிட்டான். 'அக்காள் எங்கே போயிருப்பாள்?' என்ற கேள்வி அவனைக் குடைய ஆரம்பித்தது. அக்கம் பக்கத் தில் விசாரிக்கலாம் என்று திரும்பினான். திண்ணைக் காரி வீராயி, தனது கழுகுக் கண்களால் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தவள்; திடீரென வேறு பக்கம் திரும்பி, நாடோ டிப் பாட்டொன்றை உரக்கப் பாடினாள். 6 “வீட்டுக்குப் பூட்டுப் போட்டா - பொண்ணு வேகமா நடந்து போயிட்டா!... கதவுக்குப் பூட்டுப் போட்டா - பொண்ணு அடியம்மா காளைக் கண்ணைத் தேடிக்கிட்டா! அலிகாரு பூட்டு மாட்டி ஆம்பளையைத் தேடிக்கிட்டு - அவளுந்தான் போயிருப்பா! புலியாட்டம் பயலொருத்தன் கிளியாட்டம் பொம்பளையை புடிச்சுகிட்டான் கேள் கதையை அதனால் கதவுக்குப் பூட்டுப் போட்டா - பொண்ணு காளைக் கண்ணைத் தேடிக்கிட்டா!” கடைக் போல இருந் புரிந்து வீராயி, ஏதோ பொதுவாகப் பாடுவது தாலும் அதிலுள்ள விஷமத்தனத்தை நந்தகுமார் கொள்ளாமல் இல்லை. வீராயி மீது சீறிப் பாய்ந்தான். "ஏ, பாம்பு! ஏ, கழுகு! என்னா பாட்டுப் பாடறே? ஊர் வம்பு வளர்க்கலேன்னா உடம்புக்கு ஒத்துக்காதா?" இந்த வார்த்தைகளைக் கேட்டு வீராயி சும்மா விடுவாளா? ‘‘என்னடா சொன்னே? வாடா திண்ணைக்கு! என்று சவால் விட்டாள்; தனது கோணல் வாயைப் பிளந்துகொண்டு! 88

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/88&oldid=1702489" இலிருந்து மீள்விக்கப்பட்டது