பக்கம்:ஒரே இரத்தம்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"வந்தா என்ன செய்வே? என்று திண்ணையில் ஏறி னான் நந்தகுமார். - திடீரென வீராயி, திட்டமிட்டு அவனைக் கட்டிப்பிடித் துக்கொண்டு, திண்ணையில் எரிந்துகொண்டிருந்த சிறிய விளக்கையும் ஊதி அணைத்துவிட்டு அய்யோ! அய்யோ! யாராவது என்னைக் காப்பாத்துங்களேன், காப்பாத்துங்க ளேன்” என்று அந்தத் தெருவே அதிரும்படி ஓலமிட்டாள். அரிக்கன் விளக்குகளைத் தூக்கிக்கொண்டு தெருவில் உள்ள வர்கள் ஓடிவந்தார்கள். ‘கதையைக் கேட்டீங்களா! இந்தப் பயல் வயசென்னா? என் வயசென்னா? ஏதோ சாமான் வாங்குற மாதிரி கடைக்கு வந்தான். பேசிக்கிட்டிருக்கும்போதே விளக்கை அணைச்சிட்டு என்னைக் கட்டிப்புடிச்சுக்கிட்டான்.” 66 வீராயி, தன் கற்பைக் காப்பாற்ற ஓடிவந்த அந்தத் தெருவினர்க்கு நன்றி கூறி அழுதாள். நந்தகுமார், நடந்த விஷயத்தை விவரமாகச் சொன்னான். எல்லோருமா நம்பிவிடு வார்கள்? சிலர் நம்பினார்கள். சிலர் நம்பவில்லை. 'இதுக்குத் தான் பட்டணத்தில போயி படிச்சான் போல இருக்கு! என்று முணுமுணுத்துக்கொண்டு சிலர் அகன்றனர். வீராயி யின் சுபாவம் புரிந்தவர்கள்; அவள் வீண் வம்பு வளர்த்திருப் பாள் என்று எண்ணிக்கொண்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள். அப்போது அடுத்த வீட்டுக்காரியொருத்தி நந்தகுமாரிடம் வீட்டுச் சாவியைக் கொடுத்து, செங்கமலம் கொடுத்துவிட்டுப் போனதாகவும், "இன்னைக்கு வெள்ளிக்கிழமை அம்மா சமாதி யிலே விளக்கேத்தி வச்சிட்டு வர்ரேன்னு சொல்லிட்டுப் போனாள்’ என்றும் கூறினாள். வீராயி கிளப்பிவிட்ட அவதூறு நந்தகுமாரை ஆழ்ந்த வேதனையில் ஆழ்த்திவிட்டது. அந்தத் தெருவில் உள்ளவர்கள் தன்னைப் பற்றிப் பலமாதிரி பேசக்கூடிய நிலைமை ஏற்பட்டு விட்டதென்று வருந்தினான். வீராயி ஏதோ உளறிக்கொண்டு கிடக்கட்டுமென்று அதைக் காதில் வாங்கிக்கொள் ளாதது போல் இருந்திருந்தால் இப்படியொரு கேவலம் ஏற் பட்டிருக்காது; அவளை எதிர்த்துப் பேசியது சாக்கடைச் சகதி யில் கல் எறிந்தது போலாகிவிட்டது என்று தன் தவறு குறித்து எண்ணிப் பெருமூச்சு விட்டுக்கொண்டான். எந்தச் சமுதாயம் முன்னேற்றமடைய வேண்டுமென்று ஆர்வங்கொண்டு திரிகிறானோ அதே சமுதாயத்திலே இப்படி யும் பல பேர் தன் இதயத்தில் தணலை அள்ளிக் கொட்டு கிறார்களேயென நொந்து போனான். அம்மா சமாதிக்குச் சென் றுள்ள அக்காளுக்குப் பாதுகாப்பாகச் செல்லலாமெனக் கருதி, அந்தத் தெருவைக் கடந்தான். 89

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/89&oldid=1702490" இலிருந்து மீள்விக்கப்பட்டது