பக்கம்:ஒரே இரத்தம்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாரோ சொல்லியிருக்கிறார்கள்! அதை அடிக்கடி சொல்லிக் காட்டி அம்மா, அக்காளை வீட்டிலேயே பூட்டி வைத்திருக்கிறாள். இந்தியாவை வெள்ளைக்காரன் ஆண்டபோதுதானே அந்த யுத்தம் நடந்ததும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் எல்லாம் கூட இராணுவ லாரிகள் அடிக்கடி போய்க் கொண்டிருக்குமாம். எங்கள் கிராமத்துக்குப் பக்கத்துக் கிராமத்திலே பருவமடைந்த ஒரு பெண், பொழுது விடிவதற்கு முன்னாலே வீட்டு வாசலில் வத்து கோலம் போட்டுக் கொண்டிருந்தாளாம். பருவமடைந்த பெண்கள் பகலில் வெளியே வரக்கூடாது என்று அப்படி ஒரு கட்டுப்பாடு. அவள் கோலம் போடும்போது அந்த வழியாக வந்த இராணுவ வாரி, திடீரென்று நின்றதாம். அய்யோ!அம்மா என்ற ஒலம் அவளை அப்படியே அந்த முரட்டுச் சிப்பாய்கள் தூக்கிக்கொண்டு போய்கிட்டடார்களாம். அக்கி மறுநாள் அதே நேரத்துக்கு அதே வீட்டு வாசலில் அந்தப் பருவ மங்கையின் பாழ்பட்ட உடலை மூச்சற்ற நிலையில் எறிந்துவிட்டு அந்த இராணுவ லாரி போய்விட்டதாம். இந்த நாற்பதாண்டு கால சம்பவத்தை நேரில் பார்த்ததைப் போல அம்மாவே சொல்லி, தானும் நடுங்கு அக்காளையும் நடுங்க வைப்பதை நானே கண்டிருக்கிறேனே! சரி சரி! யாரும் வரவில்லை. நாமே ஒரு வண்டியைப் பிடித்துக் கொண்டு கிராமத்துக்கும் போய்ச் சேருவோம் என்று நந்தகுமார் ரயில் நிலையத்துக்கு வெளியே வந்தான். இரட்டை மாட்டுக் கூண்டு வண்டியொன்று தயாராக நின்றுகொண்டிருந்தது. திருமாகாளம் கிராமத்தைத் தாண்டி அம்பல் கிராமத்துக்குச் செல்ல வண்டி வாடகை பேசிக்கொண்டு, கூடையையும் பெட்டியையும் வண்டி யில் தூக்கி வைத்துவிட்டு, நந்தகுமார் முன்பகுதியில் ஏறி உட் கார்ந்து கொண்டான். வண்டிக்காரர் வயதான மனிதர். தலை யில் முண்டாசு, இடுப்பில் வேட்டியை வரிந்து கட்டியிருந்தார். பூந்தோட்டம் நிலையத்திலிருந்து அம்பல் கிராமத்தை நோக்கி வண்டி மாடுகள் அசைந்தாழ் நடக்கத் தொடங்கின. வண்டக்காரர் நந்தகுமாருடன் பேச்சுக் கொடுத்தார். அவனுக்கும் அந்தப் பெரியவருடன் பேச வேண்டும் என்று ஆசை தான். சென்னையில் நீண்ட நாட்கள் இருந்துவிட்டவனுக்கு தன் சொந்தக் கிராமப் பகுதிகரைப் பார்ப்பதிலே ஒரு உற்சாகம். ஒரு புத்துணர்ச்சி, ஏன் தம்பீ, எங்கேயிருந்து கிராமத்துக்குரிய மரியாதைப் பண்புடன் நந்தகுமாரிடம் கேட்டார். சென்னையிலேயிருந்து பாபப்டு வண்டிக்காரர் கட்டணத்திலேயிருந்தா படிக்கிறீங்களா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/9&oldid=1702159" இலிருந்து மீள்விக்கப்பட்டது