பக்கம்:ஒரே இரத்தம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கமலம், இடுகாட்டில் மண்ணால் உயர்த்திக் கட்டப் பட்டிருந்த அஞ்சலையின் சமாதியில் உள்ள சிறிய மாடத்தில் அகல் விளக்கையேற்றி வைத்துவிட்டு, எதிரே அமர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தாள். திருக்கைவால் முனியாண்டி அங்குள்ள ஒரு பெரிய மரத் தின் பின்னால் மறைந்திருந்து செங்கமலத்தைக் கவனித்துக் கொண்டிருப்பது அவளுக்குத் தெரியாது. தாயின் நினைவில் தன்னை மறந்து சமாதியின் முன்னால் மண்டியிட்டுக் கரங்கூப்பி அமர்ந்திருந்த அவள் தோள் மீது யாரோ கரத்தை வைத்து மெதுவாக அழுத்துவதை அவள் உணர்ந்து திடுக்கிட்டு எழுந்து நின்றாள். அவள் கண்களை அவளால் நம்பத்தான் முடியவில்லை. அமைதியாக அவளருகே நின்றுகொண்டிருந்தான் மகேஸ்வரன். 'செங்கமலம்! என்னதான் தாயின் மீது வற்றாத பாச மும் அன்பும் இருந்தாலும் இப்படி இருட்டு வேளையில் இங்கு வரலாமா?'" செங்கமலத்துக்கு அவளருகே அவன் வந்து நின்றது, எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. இருந்தாலும் அவள் மனம் குழம்பியது. அதனால் உடல் நடுங்கியது. .. 'நீங்க எப்படி இங்க வந்தீங்க?" நா தழுதழுக்க அவள் அவனைப் பார்த்துக் கேட்டாள். இன்று எனது புதிய பங்களா கிரகப் பிரவேசமல்லவா? அதற்காக சிதம்பரத்திலிருந்து புறப்பட்டு வழியில் சில வேலைகளை முடித்துக்கொண்டு பஸ்ஸில் வந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தேன். அப்போது நீ இந்தப் பக்கம் வருவதைப் பார்த்தேன். பின்தொடர்ந்தேன். ஏன்? நான் செய்தது குற்றமா?" "உங்களுக்கு எதுவும் குற்றமாகப்படாது! ஆனால் உங்க அப்பாவும் ஊர் ஜனங்களும் உங்களை ஒதுக்கி வச்சுட்டாங்களே, ஏன்னு நினைச்சுப் பாத்தீங்களா? எல்லாம் எங்க குடும்பத்தாலே தானே! என்னாலதானே!” "நம்ப விஷயம் யாருக்கும் தெரியாது! அது தெரிஞ்சா அதுக்கு ஒரு ரகளை இருக்கு! அதையும் நான் எதிர்த்து நின்று சமாளிக்கத்தான் போகிறேன். நந்தகுமாரைத் தொட்டுக் காப் பாற்றினதே குற்றம் என்றார் என் தந்தை! உன் தாயின் சவத்தை நான் தூக்கிச் சென்றேன் என்று தண்டனையே கொடுத்துவிட் டார்! இனி என்ன இருக்கிறது? செங்கமலம்! ஒரு முக்கிய மான பிரச்சினையில் தெளிவு காண்பதற்காகக் காத்திருக்கிறேன். அது முடிந்துவிட்டால் ஊரார் அறிய உனக்கும் எனக்கும் திரு மணம். இதோ, உன் அன்புத் தாயின் சமாதிக்கு நேராக நாம் இருவரும் உறுதி எடுத்துக்கொள்வோம். 90

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/90&oldid=1702491" இலிருந்து மீள்விக்கப்பட்டது