பக்கம்:ஒரே இரத்தம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதே!" 16 நந்தகுமார்! என்னை மன்னித்துக் கொள். தவறாக நினைக் மகேஸ்வரன் அந்த இளைஞனின் தோள் மீது கை வைத்து அவனுடைய உள்ளக்கொதிப்பைக் குறைத்திட முனைந்தான். நந்த குமாரின் கண்ணீர் பட்டு அவன் கன்னங்கள் நனைந்திருந்தன. மகேஸ்வரன் அவனைச் சமாதானப்படுத்தித் தன் மீது அவனுக்கு ஏற்பட்டுவிட்ட கோபத்தையும், அவன் சகோதரி செங்கமலத் தின் மீது ஏற்பட்டுவிட்ட வெறுப்பையும் மாற்றியே ஆகவேண்டு மென்ற முடிவுக்கு வந்தான். ‘‘எங்கே; என்னைப் பாரப்பா! நான் ஒன்றும் கன்னி வேட்டையாடும் மைனர் அல்ல! கள்ளங்கபடமில்லாத ஒரு பெண் ணின் வாழ்க்கையை ஒரு நாள் இன்பத்துக்காகக் கெடுத்துவிடும் மிருகமும் நானல்ல! செங்கமலத்தை நான் மனதார நேசிக்கிறேன். மாரி, எனக்கு மாமனார்! நீயும் பொன்னனும் எனக்கு மைத்து னர்கள்! மகேஸ்வரன், நந்தகுமாரின் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே பேசினான். நந்தகுமாரின் இமைக் கதவுகள் விலகின. அவன் விழிகளுக்கு நேரே மகேஸ்வரன் மட்டுமே நின்றுகொண் டிருந்தான். செங்கமலம், அங்கிருந்து அப்போதே பறந்து போய் விட்டாள். அக்காள், அச்சத்தின் காரணமாகவும், வெட்கம் தாங்க முடியாமலும் ஓடியிருக்க வேண்டுமென்பதை நந்தகுமார் புரிந்து கொண்டான். அவள் அங்கு இல்லாதது நந்தகுமார் மனம் விட்டுப் பேசுவதற்கு நல்வாய்ப்பாகக்கூட அமைந்தது. ‘நீங்கள் என் குடும்பத்தின் மீது தனியாக ஒரு அக்கறை காட்டினீர்கள். நான் படித்துப் பட்டம் பெற வேண்டுமென்று என் தந்தையை வலியுறுத்தி அதற்கான வசதிகளையும் சென்னையில் செய்து கொடுத்தீர்கள். வழியில் வண்டிக்காரனால் தாக்குண்ட என்னைப் பத்திரமாக வீட்டுக்குக் கொண்டுவந்து சேர்த்தீர்கள். பிறகு, உடல்நிலை விசாரிக்க வீட்டுக்கு வந்தீர்கள். என் தாயின் சவத்தைக்கூடச் சுமந்தீர்கள். நான் இதுவரையில் நினைத்துக் கொண்டிருந்தேன்; சாதி ஆணவத்தின் இடுப்பை ஒடிப்பதிலும்- மனிதாபிமானத்தைப் போற்றுவதிலும் தங்களுக்குப் பெரும் ஈடு 92

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/92&oldid=1702499" இலிருந்து மீள்விக்கப்பட்டது