பக்கம்:ஒரே இரத்தம்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாடு இருப்பதாக! ஆனால்.....ஆனால்... இப்போதுதான் புரி கிறது; பூனை உரியில் தாவியது எலியைத் துரத்திக் கொண்டல்ல- பாலைக் குடிப்பதற்காக என்ற உண்மை!' நந்தகுமாரின் அழுத்தம் திருத்தமான சொற்கள் மகேஸ் வரனின் நெஞ்சில் கூரிய வேல்களைப் போலப் பாய்ந்து கொண் டிருந்தன! அந்த நிலையிலும் மகேஸ்வரன் இளம் புன்னகையுடன்தான் நந்தகுமாரைத் தட்டிக் கொடுத்தான். - செங்கமலத்னதச் சுவை பார்க்க வேண்டுமென்ற அற்ப ஆசையில் சுயநலத்துடன் அத்தனைக் காரியங்களையும் அவன் செய் திருந்தால் நந்தகுமாரின் தாக்குதலை அவனால் தாங்கிக்கொண் டிருக்க முடியாதுதான்! அவன் மனச்சாட்சிக்கு நன்றாகத் தெரி யும்; தன்னுடைய அறிவியக்கப் பணியும், சமத்துவம் பரப்புகிற தொண்டும் செங்கமலத்தை அடைய வேண்டுமென்ற குறிக் கோளுக்காக அல்ல என்று! அவனுடைய கடும் பயணத்தில் இளைப்பாறக் கிடைத்த நிழல்தான் செங்கமலம்! அந்த நிழலுக் காக அவன் பயணம் நடத்தவில்லை. சமுதாயத்தில் மண்டிக்கிடக் கும் சாதிக் கொடுமையைச் செங்கமலத்தைத் தன் வாழ்க்கைத் துணையாக்கிக் கொள்வதின் வாயிலாகச் செயல் வடிவில் தகர்த் திட முடியும் என்ற புதிய வாய்ப்பும் அவனுக்குக் கிடைத்தது; அவ்வளவுதான்! “பெரிய சாதிக்காரர்கள், சீமான்கள், எங்களைப் போன்ற வர்களின் வாழ்க்கையோடு விளையாடுவதில் என்ன ருசியைக் கண்டீர்கள்? நந்தகுமார் பேச்சில் ஆத்திரம் கொப்பளித்தது! - “பெரிய சாதிக்காரன் சீமான் பூமான் என்ற ஆணவம் இருந்தால் அரிஜனக் காலனியிலே குடிசை போட்டுக்கொண்டு குடி வருவேனா நந்தகுமார்?” 'எல்லாமே, எங்கள் குடும்பத்தின் பெயரைக் கெடுக்கத் தானே?” 6 6 “என்னை நம்பு நந்தகுமார்! நான் செங்கமலத்தைத் திரு மணம் செய்துகொள்வது என்றே முடிவு செய்துவிட்டேன். “நடக்கக்கூடிய காரியமா? இந்த ஊர் இப்போதே ணெய்க் கொப்பரையாகக் கொதித்துக்கொண்டிருக்கிறது. களுக்கு, உங்கள் வீட்டில் இருக்கவே அனுமதி இல்லை.' .. - எண் உங் “வீடு, வாசல், சொத்து, சுகம் தாய் தந்தைப் பாசம் எல்லாவற்றையும் இழக்கத் தயாராகி விட்டேன். ஒன்றை மறந்துவிடாதே! நான் நினைத்தால் என்னைப் போலவே உயர்ந்த சாதியில் பட்டம் பெற்ற ஒரு நவநாகரீகப் பணக்காரப்பெண்ணை மணந்துதொள்ள முடியுமல்லவா? அதை விடுத்து 93 செங்கம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/93&oldid=1702500" இலிருந்து மீள்விக்கப்பட்டது