பக்கம்:ஒரே இரத்தம்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- லத்தை நான் மணந்துகொள்ள முடிவெடுத்திருப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு! ஒன்று, அவளும் நானும் உள்ளத்தால் இணைந்துவிட்டோம் இரண்டாவது காரணம்; கலப்புத் திரு மணம், தீண்டாமை ஒழிப்பு போன்ற வார்த்தைகளை வெறும் உதட்டளவு உச்சரிப்புக்களாகக் கொண்டிருக்கிறார்களே; அவர் களுக்கு, நானும் செங்கமலமும் மணந்துகொண்டு பாடம் கற் பிக்க வேண்டும் என்பதாகும்.' நந்தகுமாரின் இதயத்தில் நம்பிக்கையின் ஒளிக்கீற்றுக்கள்! அப்படியானால் இந்தப் புரட்சிகரமான முடிவுக்கு என் அப்பா சம்மதிப்பார் என்று எதிர்பார்க்கிறீர்களா?” .. - மகேஸ்வரன் கேலியாகச் சிரித்துக்கொண்டே நந்தகுமா ருக்குப் பதில் சொன்னான். அந்தப் பதில்; கேள்வி போலவே இருந் தது! “உன் அப்பா சம்மதிக்கமாட்டார்! அதற்காக நானும் செங் கமலமும் யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு ஓடிப்போய் எங்கள் திருமணத்தை நடத்திக்கொள்ள நீ ஒப்புக்கொள்கிறாயா?" நந்தகுமார் திகைப்புடன் பெருமூச்சு விட்டுக்கொண்டு பதில் பேசாமல் நின்றான். வா! போகலாம்! குடிசை வேலை முடிந்திருக்கும் என்று நினைக்கிறேன். என்ன, போகலாமா?' மகேஸ்வரன்; பேச்சின். திசையைத் திருப்பினான். குடிசை யமைக்கும் வேலை முடிந்துவிட்டதை நந்தகுமார், யசைப்பின் மூலம் தெரியப்படுத்தினான். தனது தலை அங்கு யார் இருக்கிறார்கள்? அப்பாவும் அண்ணனுமா?’” 'ஆமாம்! இரண்டு பேருந்தான் இருந்தார்கள்! 'பாவம், என் வருகைக்காகக் காத்துக்கொண்டிருப் பார்கள். நேரமாயிற்று. உம் புறப்படு, போவோம்!" - மகேஸ்வரனைப் பின்பற்றி நந்தகுமார் நடந்தான். "நந்தகுமார்! தயவுசெய்து இங்கு நடந்தது எதையும் உன் அப்பாவிடமோ, அண்ணனிடமோ சொல்லிவிடாதே! எங்கள் திருமண விஷயம் பற்றி உன் தந்தையிடம் எப்போது பேச்சைத் தொடங்குவது என்று எனக்குத் தெரியும். அதுவரை யில் பொறுமையாக இருக்க வேண்டும். ' நந்தகுமார், அதற்குப் பதில் சொல்லாவிட்டாலும் அந்தக் கருத்தைத் தன் மனத்துக்குள் ஆமோதித்துக்கொண்டான். மகேஸ்வரனுக்காகப் போடப்பட்ட குடிசையைக் கண்ட தும் அவனுக்கு ஒரே பூரிப்பாக இருந்தது. தன் தந்தைக்கும், அவரது சாத்திர சம்பிரதாயங்களுக்கும் எதிராக அமைக்கப்பட்ட 94

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/94&oldid=1702501" இலிருந்து மீள்விக்கப்பட்டது