பக்கம்:ஒரே இரத்தம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாசறைபோல அந்தக் குடிசை, மகேஸ்வரனுக்குக் காட்சி தந் தது. மகேஸ்வரனும் நந்தகுமாரும் குடிசையை நோக்கி வரு வதை மாரியும் பொன்னனும் பார்த்துவிட்டு எழுந்து நின்று வணங்கி மரியாதை செலுத்தி ஒதுங்கி நின்றனர். மகேஸ்வரன், மாரியின் தோளில் ஒரு கையையும் பொன்னனின் தோளில் ஒரு கையையும் போட்டுக்கொண்டு வீடு பிரமாதமாக இருக் கிறது” என்றான். . - மாரியின் உடல் நடுங்கிற்று! நா, குழறிற்று! “சின்ன எஜமான்! இதெல்லாம் என்னங்க! வேண்டாங்க! கையை எடுங்க!” என்றவாறு மகேஸ்வரனின் காலில் விழப்போன மாரியைத் தடுத்து நிறுத்தி, மகேஸ்வரன்; "எத்தனை தடவை சொல்லிவிட்டேன்! உங்களையே நீங்கள் தாழ்த்திக்கொள்ளா தீர்கள் என்று! எனச் சற்றுக் கண்டிப்பாகச் சொன்னான். மாரி, பொன்னன், நந்தகுமார் மூவரும் எதுவும் பேசாமல் இருந்த னர். ஆமாம்! புது வீட்டில் பால் காய்ச்சிச் சாப்பிட வேண் டாமா? பால் வாங்கி வைத்திருக்கிறீர்களா? அடுப்பு போட் டிருக்கிறதா?" என்று கேள்விகளை அடுக்கினான் மகேஸ்வரன். 'ஓ! அழகா ஒரு அடுப்பு என் மவ செங்கமலந்தான் போட்டு வச்சிருக்கு! இதோ பாருங்க! பால்கூட சொம்பிலே வாங்கி வச் சிருக்கு! மாரி, முகமலர்ச்சியுடன் சொன்னதும் மகேஸ்வரனின் நெஞ்சில் இன்ப மழை பொழிந்தது. "பாலைக் காய்ச்ச வேண்டாமா?" மகேஸ்வரன், மூவ ரின் முகத்தையும் பார்த்தான். மாரி, பதில் கூற முடியாமல் திணறினார். “சின்ன எஜமான் சாப்பிடுற பாலு! நீங்களே கிட்டா நல்லதுன்னு....’ 66 காய்ச்சி பரவாயில்லை. உங்கள் 'நீங்கள் நினைக்கிறீர்களாக்கும். மகள் செங்கமலத்தை வரச் சொல்லி பாலைக் காய்ச்சச் சொல் லுங்கள். எனக்கு இந்த அடுப்படி வேலையெல்லாம் தெரியாது.” வலிக் மாரி, சிறிது நேரம் பேசாமல் நின்றார். பிறகு, "செங்கம லத்தைப் போயி கூட்டிகிட்டு வா” என்று நந்தகுமாரிடம் சொன்னார். "எனக்குத் திடீர்னு கால் ஒருமாதிரியா குதுப்பா! அண்ணன் போகட்டும்” என்று சமாளித்தான் நந்த குமார். மாரி, பொன்னனைப் பார்க்கவே அவன் தந்தையின் கட்டளையை நிறைவேற்றத் தன் வீடு நோக்கி விரைந்தான். தன் அக்காள் வரும்போது தனக்கும் சங்கடமாக இருக்கும், அவளுக்கும் சங்கடமாக இருக்குமென்று நந்தகுமார் மிகுந்த குழப்பமுற்றான். தன் கால் வலிக்கு வைத்தியரிடம் சென்று 95

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/95&oldid=1702502" இலிருந்து மீள்விக்கப்பட்டது