பக்கம்:ஒரே இரத்தம்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 எரிகிற வீட்டுக்குள்ளே எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் அமைதியாகக் கண்களை மூடிக்கொண்டு ஒரு தூணைக் கட்டிப்பிடித்த வாறு உட்கார்ந்திருந்த செங்கமலத்தைப் பார்த்துப் பொன்னன் ஒருக்கணம் சிலையானான். அப்போது அவள் மீது தீப்பிடித்து எரியும் ஓலைப்பாய் ஒன்று விழுந்தது. அவள் கண்களைத் திறக்கவில்லை. ஆனால் முகத்தில் மட்டும் மகிழ்ச்சி ஒளி உதயமாயிற்று. " அவளது சேலைத் தலைப்பில் அந்தத் தீ பிடித்துக்கொண் டதைப் பார்த்த பொன்னன், "செங்கமலம்!” என்று கத்திக் கொண்டே அவள் மீது பாய்ந்து, சேலைத் தலைப்பில் தொத்திக் கொண்ட தீயைக் கைகளால் கசக்கி அணைத்து, அவளைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு, வீட்டுக்குள்ளிருந்து வெளியே ஓட நாலு பக்கங்களிலும் சுற்றிச் சுழன்றான். 'அண்ணே! என்னை விட்டுவிடு! தயவுசெய்து நீ மட்டும் தப்பிப் போய்விடு!" என்று செங்கமலம் அழுததையும், திமிறிய தையும் லட்சியம் செய்யாமல், எரிந்துகொண்டிருந்த தீக் கொழுந்துகளைத் தாண்டி செங்கமலத்துடன் வெளியே வந்து விழுந்தான். தெருவிலே உள்ளவர்கள்; திருக்கைவால் முனியாண்டி, அவன் மனைவி வீராயி உட்பட அனைவருமே மாரியின் வீட்டுத் தீயை அணைப்பதில் தீவிரம் காட்டி ஒருவாறு வெற்றியும் பெற்றனர். மாரி வீட்டை நெருப்பிலிருந்து காப்பாற்ற முடியாவிட் டாலும், அவரவர்களும் தங்கள் தங்களுடைய வீடுகளைக் காப் பாற்றிக்கொள்வதில் மிகுந்த அக்கறையுடையவர்களாக இருந்த தால் அந்தத் தெருவில் தீ பரவாமல் தடுக்கப்பட்டுவிட்டது. செய்தி சில நொடிகளில் அக்கம் பக்கத்தில் பரவியதால், மாரி, நந்தகுமார், மகேஸ்வரன் ஆகியோரும் அங்கே பதறிப் போய் வந்துவிட்டனர். எரிகின்ற அந்தச் சிறிய வீட்டுக்குள் எள்ளளவு பதட்டமும் இன்றி செங்கமலம் அசைவற்று உட்கார்ந்திருந்தாளே; அதற்கு 97

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/97&oldid=1702504" இலிருந்து மீள்விக்கப்பட்டது