பக்கம்:ஒரே இரத்தம்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ன காரணம் என்று பொன்னனால் புரிந்துகொள்ள முடிய வில்லை. செங்கமலத்தின் செய்கையைத் தன் தந்தையிடம் வியப் !!!டன் கூறினான் பொன்னன். 'பாவம் - பொண்ணு பயந்துபோயி அப்படியே அதிர்ச்சி யிலே கைகால் ஓடாமல் ஸ்தம்பித்துப் போய்விட்டது” என்று மாரி, மகனுக்கு விளக்கம் தந்தார். இந்தத் தீவைப்புக் காரியம் திருக்கைவால் முனியாண்டியி னால்தான் நடந்திருக்கும் என்ற முடிவுக்கு வந்திருந்த மகேஸ் வரன், தன் முடிவை மாற்றிக்கொண்டான்; பொன்னன் விவ ரித்த செய்திக்குப் பிறகு! அக்காளின் செயலுக்குக் காரணம் நந்தகுமாருக்கும் ஓரளவு புரிந்துவிட்டது. அதனால் அவன் வீராயி பற்றியோ, முனியாண்டி பற்றியோ சந்தேகம் கொள்ளவில்லை. செங்கமலம், தான் எடுத்த முடிவு நினைத்தவாறு நிறை வேறவில்லையே என்று ஏங்கினாள். மகேஸ்வரனையும் நந்தகுமாரையும் விட்டுப் பிரிந்து வந்த செங்கமலத்துக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. - தன்னுடைய அவசரப் புத்தியால் தன் குடும்பத்திற்கும் கெட்ட பெயர் பரம்பரை பரம்பரையாக மதிப்போடு வாழுகிற பண்ணையார் குடும்பத்திலும் அமளி துமளி இதை அவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. - - மகேஸ்வரனைப் பார்த்து நந்தகுமார் கேட்ட கேள்விகள் ஒவ்வொன்றும் அவள் இதயத்தில் வேல்களாக வடிவெடுத்துக் குத்தின. மகேஸ்வரனிடம் தன் மனதைப் பறிகொடுத்தது; ஏதோ ஓரிரு நாள் உடல் இன்பத்தோடு முடிந்துவிடுகிற கதையே தவிர வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய சுவையான இலக்கியமல்ல என்பதை அவள் தீர்மானித்துக்கொண்டாள். எதற்கும் துணிந்து மகேஸ்வரன் தன்னை மனைவியாக்கிக்கொண்டால்கூட, பண்ணையார் குடும்பம் பாழ்பட்டுவிடுவதை எப்படி அவளால் தடுக்க முடியும்? மரியாதையாக வாழ்ந்த ஒரு குடும்பத்தின் ஒற்றுமையைச் சிதற அடித்து - தந்தையையும் மகனையும் பிரித்துவைத்து - ஊரார் பார்த்து "எல்லாம் இந்தச் சிறுக்கியால் வந்ததுதான்! சந்தோஷ மாக இருந்த பண்ணையார் குடும்பத்தைக் கெடுக்கும் சண்டாளி யாக வந்து சேர்ந்தாள்" என்ற சாபத்தையும் பெறுகிற குற்றத் தைச் செய்ய வேண்டுமா? விடை காண முடியவில்லை அவளால்! இந்தக் கேள்விகள் அப்போதே எழுந்திருந்தால், இவ்வளவு பெரிய தவறுக்கான ஆரம்பமே ஆகியிருக்காதே என்றும் தன்னைக் கடிந்துகொண்டாள். நாடகங்களில் கேட்டதை - பார்த்ததைத் தவிர 'காதல்' என்ற சொல்லுக்கான விளக்கங்களை அறிந்தவள் அல்ல அவள்! 98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_இரத்தம்.pdf/98&oldid=1702505" இலிருந்து மீள்விக்கப்பட்டது