பக்கம்:ஒரே உரிமை.pdf/121

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
நடக்காத கதை


"காத்தாயி! அந்தப் பக்கிரிப் பயல் போற 'மிடுக்' கைப் பார்த்தியா? மானத்தைப் பார்த்துக்கிட்டு இல்லே அவன் நடக்கிறான்? என்னதான் வாழ்வு வந்தாலும் இப்படியா?" என்று அதிசயித்தவண்ணம், கையிலிருந்த புகையிலையிலிருந்து கொஞ்சம் திருகி எடுத்து வாய்க்குள் திணித்துக்கொண்டான் கண்ணுச்சாமி.

வீட்டுக்குள் ஏதோ வேலையாயிருந்த காத்தாயி வெளியே வந்து பார்த்தாள். பக்கிரி ராணுவ உடையுடன் 'கவாத்து நடை' நடந்து சென்று கொண்டிருந்தான். "ஆமாம், சண்டைக்குப் போய் வந்த சூரர் இல்லே; அப்படித்தான் நடப்பாரு!" என்றாள் காத்தாயி.

"ஊம்......இவன் சண்டைக்குப் போய் என்னத்தைக் கிழிச்சிப்பிட்டாள்? அங்கே இந்த வெள்ளைக்கார சோல் ஜருங்க இருக்கானுங்க பாரு, அவனுங்க பூட்ஸைக் கீட்ஸைத் தொடைச்சுக்கிட்டு இருந்திருப்பான்!"

"நல்லாச் சொன்னே! இருட்டிலே ஈச்ச மரத்தைக் கண்டா, 'ஐயோ, பிசாசு!'ன்னு அவன் அலறிக்கிட்டு ஓடுவானே!"

"அதுக்கில்லை காத்தாயி, நான் சொல்றது! மனிசன் முன்னே பின்னே இருந்ததைக் கொஞ்சமாச்சும் நிக்னச்சுப் பார்க்க வேணும்?—அந்தப் பயல் சண்டைக்குப் போறதுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/121&oldid=1149426" இலிருந்து மீள்விக்கப்பட்டது