பக்கம்:ஒரே உரிமை.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

மனக் குறை

“ஓஹோ...!”

“ஆமாம்; உன்னை ஏன் அப்பா அடிச்சார்?” என்றாள் பட்டு.

“சட்டையை அழுக்காக்கிக் கொண்டு வந்து விட்டேனாம், அதற்காக!” என்றான் கிட்டு.

பாவம், அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்த உண்மை அவ்வளவுதான்!– ஆனால், அவர்கள் அறியாத– ஏன், அவர்களைப் பெற்றோரே அறியாத உண்மையொன்றும் இருக்கத் தான் இருந்தது.

அதுதான் இந்தப் பாரத புண்ணிய பூமி முழுவதும் ‘பார்க்குமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கும்’ தரித்திரம்.

அதன் பயனாகத் தங்களுக்குள் ஒரு குற்றமும் இல்லா விட்டாலும், இன்று எத்தனையோ தம்பதிகள் தங்கள் வாழ்க்கையில் இயற்கையாக நிலவக்கூடிய அமைதியைக் கூடக் குலைத்துக் கொள்ளவில்லையா?-அந்தக் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான் நாராயணமூர்த்தியும் குமுதமும்.

***

த்திரமெல்லாம் ஒருவாறு அடங்கியபிறகு, தன் மேல் பரிதாபமாக விழுந்து கிடந்த பத்திரிகையை எடுத்துப் பார்த்தான் நாராயணமூர்த்தி. அது, அவனுடைய நண்பனை ஹரிகிருஷ்ணனிடமிருந்து வந்திருந்தது.

அவ்வளவுதான்; அவனுக்கு மீண்டும் ஆத்திரம் பற்றிக் கொண்டு வந்தது.

நேற்றுவரை அவனும் தன்னைப்போல் வாடகை குடித்தனம் செய்துகொண்டு வந்தவன்தான், இன்று......?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/62&oldid=1148979" இலிருந்து மீள்விக்கப்பட்டது