பக்கம்:ஒரே உரிமை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

சில இடங்களில் ஆசிரியர் கையாளும் உவமைகளும் சமூகக் கேட்டுக்குக் காரணமானவர்களை வம்புக்கு இழுப்பதைப் பாருங்கள் :

தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்து விட்டவர்களைப்போல், “போடா, போ!” என்று எரிச்சலுடன் அவனைப் பிடித்துத் தள்ளிவிட்டான் சங்கர்.

அவளைக் கண்டதும் அவன் முகம் மலர்ந்தது— சூரியனைக் கண்ட தாமரையைப்போல் அல்ல. சோற்றைக் கண்ட ஏழையைப் போல.

அவர் தம்முடைய காரியங்களை யெல்லாம் முடித்துக் கொண்டு நைவேத்தியத்துக்காகக் காத்துக் கொண்டிருக்கும் கல்லுப் பிள்ளையாரைப் போல உட்கார்ந்திருப்பார்.

***

சிரியரின் கதைகளில் கறவை மாடு குடும்பத்துக்குக் ‘கார்டியன்’ ஆகிறது: கிளி ‘கைது’ செய்யப்படுகிறது: குப்பைத் தொட்டிக்கும் வேலைக்காரியின் வயிற்றுக்கும் உள்ள வேற்றுமை மறைந்து போகிறது; சந்தர்ப்பங்களைத் தானே ஏற்படுத்திக் கொள்வதில் தமிழ்நாட்டு ‘மாமியார்’ நெப்போலியனுக்கு நிகர் ஆகிறாள்; வாழ்வதற்காகப் பிரார்த்தனை செய்வதைவிடச் சாவதற்குப் பிரார்த்தனை செய்வது கட்டாயமாகிறது; கூடைக்காரியாக வியாபாரம் செய்கிறவள் அரிச்சந்திரனைப் பின்பற்ற விரும்பித் தோல்வி அடைந்த பின் புதிய வழி காண்கிறாள்.

பொருளாதார ஏற்றத் தாழ்வு என்ன என்ன தீமை செய்கிறது என்பதை ஆசிரியர் பல இடங்களில் படம் பிடித்துக் காட்டுகிறார். குழந்தைகளின் வாழ்க்கை முதல் காதலர்களின் வாழ்க்கை வரையில் எல்லோருடைய வாழ்க்கையையும் பொருளாதார நிலைமை எப்படி எப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/7&oldid=1148919" இலிருந்து மீள்விக்கப்பட்டது