பக்கம்:ஒரே உரிமை.pdf/76

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

தேற்றுவார் யார்?

ரெண்டு!” என்று ஏதோ ஒரு தினுசாக ராகம் இழுத்துப் பாடிய வண்ணம் எண்ணிப் போட்டான். பதினெட்டாவது ‘கை’ போடும்போதே, தினசரி எத்தனையோ பேரை ஏமாற்றி ஏமாற்றிப் பழகிப்போயிருந்த அவனுடைய வாய், “இருபது, இருபது...!” என்று ‘மங்களம்’ பாடி முடித்து விட்டது!

பாவம், தான் போட்ட லாபக் கணக்கில் அந்தக் கடைக்காரனின் கைங்கரியத்தால் பத்தணா குறைந்து போனதை அவள் அறியவில்லை; துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்யும் பகவானும் பிரசன்னமாகி அவளுக்கு நீதி வழங்கவில்லை.

***

“மாம்பழம், மாம்பழம்!” என்று கூவிக்கொண்டே தெருத் தெருவாக நடந்தாள் அம்மாயி. பஸ்ஸுக்காக வழிநடைப் பாதையில் காத்திருந்த ஒருத்தி, “ஏ, மாம்பழம்!” என்று அவளைக் கூப்பிட்டாள்.

“ஏம்மா!” என்று பதிலுக்குக் குரல் கொடுத்துக் கொண்டே வந்து, தலைமேலிருந்த கூடையை இறக்கிக் கீழே வைத்தாள் அம்மாயி.

“டஜன் என்ன விலை?”

“ஒரே விலை சொல்லவா? இல்லே– இரண்டு விலை சொல்லவா?”

“ஒரே விலைதான் சொல்லு!”

“வேறே விலை கேட்கமாட்டீங்களே?”

“கேட்க மாட்டேன்.”

“டஜன் பன்னிரண்டணா!” என்று சொல்லி விட்டு, மனைவியை அடகு வைத்துக் காலகண்டய்யரின் கடனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/76&oldid=1149011" இலிருந்து மீள்விக்கப்பட்டது