பக்கம்:ஒரே உரிமை.pdf/78

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தேற்றுவார் யார்?

என்று எண்ணி, அவனிடம் இரண்டணாவைக் கொடுத்து இரண்டு பலூன்களை வாங்கி வைத்துக்கொண்டாள்.

சிறிது தூரம் சென்றபிறகு, அவளுக்கு வயிற்றைக் கிள்ளியது. அதற்கு ஏற்ற மாற்று வெற்றிலை போட்டுக் கொண்டு, வாயில் புகையிலையை அடக்கிக் கொள்வது என்பதுதான் அவள் வாழ்க்கையில் கண்டறிந்த அனுபவ உண்மையாயிற்றே! அருகிலிருந்த கடையில் ஓரணாவுக்கு வெற்றிலை, பாக்கு, புகையிலை வாங்கிக் கொஞ்சம் போட்டுக் கொண்டு, மீதியை மடியில் கட்டி வைத்துக் கொண்டாள்.

***

{{larger|ரில் அப்பொழுது காலரா என்பதற்காக, சுகாதார அதிகாரிகள் வேறொன்றும் செய்யாவிட்டாலும் ஊரைச் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தனர். அன்று காலை கிடங்குத் தெருவில் அவர்களுடைய நடமாட்டம் அதிகமாயிருந்தது. “எங்கே அழுகல் பழங்களோடு நல்ல பழங்களியும் சேர்த்து வாரி லாரியில் கொட்டிக்கொண்டு போய் விடுவார்களோ!” என்று எல்லாக் கடைக்காரர்களும் அவர்களைப் பீதியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவர்களில் யாராவது ஒருவர் தன் கடைக்கு அருகே வந்துவிட்டால் போதும், உடனே அந்தக் கடைக்காரன் அவரைக் கடைக்கண்ணால் பார்த்துக்கொண்டே, “அடேய், பையா ‘ஐயா’வின் வீடு உனக்குத் தெரியுமோ, இல்லையோ? நல்ல பழங்களாக ஒரு டஜன் பொறுக்கி எடுத்துக் கொண்டுபோய் ‘அம்மா’கிட்ட கொடுத்து விட்டு வாடா!” என்பான், ‘ஐயா’வும் அந்தக் கடையைக் கவனிக்காதவர்போல் அப்பால் போய்விடுவார்!

அந்த அற்புதமான காட்சி ஏனோ திடீரென்று அம்மாயியின் மனக் கண் முன்னால் தோன்றிற்று. “ஐயோ! அந்தப் புண்ணியவான்கள் கண்ணில் நாம் படாமல் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/78&oldid=1149015" இலிருந்து மீள்விக்கப்பட்டது