பக்கம்:ஒரே உரிமை.pdf/86

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

கைமேல் பலன்


"சரி, போய் வா! நானும் 'மீட்டிங்'குக்குப் போறேன்" இன்னிக்குப் பட்டணத்திலே யிருந்து யாரோ ஒரு பெரிய தலைவரு வந்து பேசப் போறாராம்!" என்றான் சின்னப்பன்.

இருவரும் பிரிந்தனர்—நிரந்தரமாக அல்ல; தற்காலிகமாகத்தான்!

***

ன்று மாலை செல்லம் வீட்டில் விளக்கேற்றி வைத்து விட்டு வாசலுக்கு வந்து நின்றாள். சின்னப்பன் வந்தான்.

"வாங்க, பட்டணத்திலேயிருந்து வந்த தலைவரு என்ன சொன்னாரு?" என்று ஆவலுடன் விசாரித்தாள் செல்லம்.

சின்னப்பன் தலையைச் சொறிந்து கொண்டே, "அவர் நல்லதைத்தான் சொன்னாரு!" என்றான்.

"என்ன, நல்லதைச் சொன்னாரு?"

"இப்போ எங்கே பார்த்தாலும் தீப்பெட்டிக்குப் பஞ்சமாயிருக்குதில்லே? இந்தச் சமயத்திலே நீங்க 'ஸ்ட்ரைக்' சேஞ்சி உற்பத்தியைக் குறைக்கலாமான்னு கேட்டாரு!"

"உற்பத்தியைக் குறைக்காம இருப்பதற்கு உழைக்கிறவனுங்க உடம்பிலே கொஞ்சமாச்சும் தெம்பு இருக்க வேணாமா?—அதுக்குக் கொஞ்சம் சம்பளத்தை ஒசத்திப் போட்டால் என்னவாம்?"

"எப்படி ஒசத்தறது? உற்பத்தியைப் பெருக்குனாத்தானே முதலாளிக்கு லாபம் அதிகமா வரும்? அவரும் சந்தோசமா சம்பளத்தை ஒசத்திப் போடுவாரு!— இது தெரியாம இத்தனை நாளா நாங்களும் இந்த 'ஸ்ட்ரைக்' கைக் கட்டிகிட்டு அழுதோமே!" என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/86&oldid=1149342" இலிருந்து மீள்விக்கப்பட்டது