பக்கம்:ஒரே உரிமை.pdf/89

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கைமேல் பலன்

87

தீரவில்லை. அதாவது, அவர்கள் நினைத்தபடி சம்பளம் உயரவில்லை.

அதற்குப் பதிலாக, "நம்மிடம் தீப்பெட்டி 'ஸ்டாக்' அதிகரித்து விட்டது. மொத்த வியாபாரிகளிடமிருந்து 'ஆர்ட'ரும் வரவில்லை அவர்களெல்லாம் விலையைக் குறைப்பதற்கு ஏதாவது முயற்சி செய்தால் தேவலை என்று வேறு எழுதி வருகிறார்கள். எனவே, இனி உங்களுக்கு இரவில் வேலை கிடையாது; பகலில் மட்டுந்தான் வேலை!" என்று மன்னார்குடி மாணிக்கம் அறிவித்து விட்டார்.

அவர்தான் என்ன செய்வார், பாவம்! நிலைமை லாபத்தில் நஷ்டம் வரும் அளவுக்கு வந்து விட்ட போது, அவர் பேசாமல் இருக்க முடியுமா?

இருந்தாலும், இதைப் பற்றிப் 'பட்டணத்துத் தலைவர்' வந்து ஏதாவது சொல்வார் என்று 'எம். எம். மாட்ச் பாக்டரி' தொழிலாளிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் அந்தப் பக்கம் வரவும் இல்லை; ஒன்றும் சொல்லவும் இல்லை!

***

ன்று காலை வேலைக்குப் புறப்படும்போது, "செல்லம், நாலுபேரைப் போல தாமும் நல்லாயிருக்கிறதுக்கு இருபத்து நாலு மணி நேரம் வேணுமானாலும் நான் வேலை செய்யலாம்னு எண்ணியிருந்தேன்; அதுக்கும் இனிமேல் வழியில்லாமல் போச்சு!" என்றான் சின்னப்பன்.

"ஏன்?" என்று கேட்டாள் செல்லம்.

"தீப்பெட்டி 'ஸ்டாக்' ஏராளமா இருக்குதாம். அதுக்காக இனிமேல் ராத்திரியிலே வேலை இல்லைன்னு எசமான் சொல்லிட்டாரு!"

"அப்படின்னா இனிமேல் பழைய சம்பளம் தான் கிடைக்கும்னு சொல்லுங்க!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_உரிமை.pdf/89&oldid=1149350" இலிருந்து மீள்விக்கப்பட்டது