பக்கம்:ஒரே முத்தம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஒரே முத்தம் து புத்தன்:- அன்புள்ளவர்களே! உங்கள் ஆர்வத்திற்கு என் நன்றி. நண்பர் யாளிதத்தர் குறிப்பிட்டதுபோல், இது என் பிறந்தநாள் மட்டுமல்ல; இன்பபுரியின் இன்ப வாழ்வுக்காகப் பிரதிக்ஞை எடுத்துக்கொள்ள, ஆண்டுதோறும் நடைபெறும் விழா, இந்நாட்டின் வருங்காலம் யாளிதத்தருக்குக் கனவு, எனக்கு என் வாழ்வின் லட்சியம். உயர்ந்த லட்சியம். உன்னத மான லட்சியம்! என் உயிரோடு உயிராக உறைந்துகிடப்பது இந்நாட்டு மக்களின் இன்ப வாழ்வு, பேதமற்றப் பெருவாழ்வு, சீமான் ஏழை என்னும் நிலை ஒழிந்த சிங்கார வாழ்வு.இதுவே என் மூச்சு. என் இதயகீதம். இந்த லட்சியத்தில் வெற்றிபெற, எதையும் தியாகம் சேய்வேன். வேண்டுமானால் இன்பபுரியின் மகுடத்தைக்கூட! (கைதட்டலும், வாழ்த்தொலியும்) வருங் கால இன்பபுரி சாம்ராஜ்யத்தில், ஏழை, பணக்காரன் இருக்க மாட்டான். ஆண்டான், அடிமை இருக்கமாட்டான். மனிதன் தான் இருப்பான்! ரமேலா:- [மீண்டும் வாழ்த்தொலி கிளம்புகிறது. கூட்டம் கலைகிறது. விழா முடிந்து எல்லோரும் செல் கின்றனர் குமரியும் தோழி ரமேலாவு மட் டும் மிஞ்சுகிறார்கள் பரிசுகளையே கவனித்த குமரியின் முகக்கோணலை ரமேலா கவனிக் கிறாள்] என்னம்மா,விம்முகிறாய்? நீ ஒன்றும் பரிசளிக்க வில்லை என்றுதானே? இளவரசர் உன்னையே பரிசாக ஏற்றுக் கொள்வார், கவலைப்படாதே. குமரி:- ரமேலா! என் உயிரோடு உயிராக உறைந்து கிடப்பது இந்நாட்டு மக்களின் இன்பவாழ்வு. பேதமற்ற பெரு வாழ்வு,சீமான் ஏழை என்னும் நிலையொழிந்த சிங்கார வாழ்வு! ரமேலா:- ஓ! அதோடு குமரியையும் சேர்த்துக்கொள்ள வில்லை, அதுதானே? குமரி:- (கோபமாக) ரமேலா! ரமேலா:- குமரி! கூட்டத்தில் சொல்லும் விஷயமா அது? ஒருகாலம் வரும், அப்போது மஞ்சத்தில் கொஞ்சலோடு சொல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/10&oldid=1702586" இலிருந்து மீள்விக்கப்பட்டது