பக்கம்:ஒரே முத்தம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 105 முத்தமிட்டிருக்கிறாய். இன்றைக்கு இந்த நிரபராதிகளின் பிணங் களுக்கும் பஞ்சணையாகப் போகிறாய்! சதிசெய்தவர்கள் - கொலை புரிந்தவர்கள்- ராஜத்துரோகிகள் இத்தனை பேரையும் கழுத்தை நெறித்திருக்கிறாய். இன்றைக்கு எங்களையும் கட்டித் தழுவப் போகிறாய். கோரமான குற்றவாளிகளை உன் கோரப் பசிக்கு கள உணண்க இரையாக்கிக் கொண்டிருக்கிறாய். இந்நாட்டில் கொந்தளிப்பை ஒழிக்கப் புறப்பட்ட எங்களையும் சுவை பார்க்கப் போகிறாய். சுவைத்துப் பார்! எங்கள் ரத்தத்தில் துரோக உணர்ச்சி இருக் கிறதா என்று சுவைத்துப்பார்!எங்கள் இருதயத்தில் சதியாலோ சனை தேங்கியிருக்கிறதா என்று சுவைத்துப்பார்! எங்கள் எலும் புக்கூட்டில் சூழ்ச்சி எண்ணம் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று சுவைத்துப்பார்! சேனாதி:- (யாளிதத்தரிடம்) நீங்கள் ஏதாவது? யாளி இளவரசரோடு சாகிறேனே என்ற பெருமை. மகாராஜாவின் தீர்ப்புக்கேற்ப மடிகிறேனே என்ற திருப்தி என் நாட்டு தமிழர் முன்னிலையில் என் உயிர் விடை பெறுகிறதே என்ற ஆறுதல் சேனாபதியாரே! சாவற்குமுன் ஒரு வேண்டு கோள். ளவரசருக்குமுன் நான் சாகவேண்டும். அந்த உத்த மரின் உயிர் தூக்குமரத்தில் துடிப்பதை நான் காணமாட்டேன் வாகை மாலை சூடவேண்டிய அவர் கழுத்தில் சாவுக்கயிறு இறுக் கப்படுவதை நான் காணமாட்டேன். சிம்மாசனத்தில் அமர வேண்டிய இவர் பொன்மேனி சவமாக இந்த மண்ணில் சாயும் கோரத்தை நான் காணமாட்டேன் நானே முதலில் சாகிறேன். கப பொன்:- நானே முதலில் சாகிறேன். இளவரசரைத் தூக்குமேடையில் நிறுத்தியது நான்! நானில்லாவிட்டால் இந்த நாட்டுக்கே இந்த நாசம் வந்திருக்காது. என்னுடைய கா காதல், இளவரசரின் பலிபீடம். நான் ஒருத்தி நாட்டில் பிறந்தேன். ஆம்! இந்த நாட்டையே அழிக்கப் பிறந்தேன். நானே முதலில் சாகிறேன். (பெப்பு பகுட்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/107&oldid=1702737" இலிருந்து மீள்விக்கப்பட்டது