பக்கம்:ஒரே முத்தம்.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் மகாவீ:- 109 ஆம். இந்த ஸ்தானம். (தூக்குமேடையைக் காட்ட, விபீஷணன் திகைக்கிறான்)க்கு . மகா:- திகைக்காதீர்! மாணிக்கக் கோட்டை காவலன், மாதவன் எழுதிய கடிதம் பாரும் "மன்னனைச் சாய்த்து மணி முடியை விபீஷணர் தலையில் வைக்காத வரையில், மாதவன் தூங்கமாட்டான்." இதோ படையெடுக்கத் தயாரித்த படம். விபீஷணரே! நல்ல முயற்சிகள். விபீஷ:- இவை பொய்க் கடிதங்கள் மகாராஜா! சித்:- இல்லை. இளவரசர், யாளிதத்தர், பொன்னி, மூவரை யும் சூழ்ச்சியாக வரவழைத்துத் துணில் கட்டி, ஒருவரைக் கொல்வதாக ஒருவருக்கு பயங்காட்டி தயாரித்த, உ கடிதங்கள்தான் பொய்! விபீஷ:- இதெல்லாம் என்ன மாயை? மகாவீ:- உங்கள் துரோகி! பாம்பைப்போல் நெளிந்து, என் பரம் பரையைப் பாழாக்கப் பார்த்தாய். நாளை உனக்கும்,உன் கூட் டாளிகள் மாதவன், எல்லப்பன், மற்றவர்களுக்கும் விசாரணை. புத்தா! என்னை மன்னித்துவிடு. (தழுவிக் கொள்கிறார்] புத்:- மக்கள் உங்களை மன்னிப்பார்கள். மக்கள்:- இளவரசர் வாழ்க! மகாராஜா வாழ்க! மகாவீ:- சித்ரா! நாட்டுக்காக சித்ரா! நாட்டுக்காக நீ செய்த தியாகத்தை, இன்பபுரி உள்ளளவும் மறக்காது. விபீஷ:- தியாகம்! தியாகம்! இல்லை, இளவரசன்மேல் ளவரசன்மேல் உள்ள மோகம்: சண்டாளி செய்த சதிக்குப்பெயர் தியாகம். ஆசை நாயகனுக்காகச் சொந்த நாயகனைக் காட்டிக்கொடுத்த சூன்யக்காரியின் சூழ்ச்சிக்குப்பெயர் தியாகம்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/111&oldid=1702742" இலிருந்து மீள்விக்கப்பட்டது