பக்கம்:ஒரே முத்தம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 ஒரே முத்தம் பொன்:- அன்பா! மன்னருக்கு நம் காதல் பிடிக்கவே யில்லை. என்ன இருந்தாலும் நான் பறைச்சியல்லவா? புத்த:- சிப்பியில் முத்து, அதை மகுடத்தில் வைப்பார். சேற்றில் செந்தாமரை, அதன் அழகை ரசிப்பார் ஆனால்,மனித குலத்திலேயே பிறந்த உன்னை வெறுக்கிறார். பொன்னி! உல கமே எதிர்த்தாலும் நம்மைப் பிரிக்க முடியாது. பொன்:- நம்மை ஒன்றுசேர்க்க, சித்ரா கணவனை இழந் தாள், குமரி... காதலை இழந்தாள். (மகாவீர மன்னர் வருதல்) புத்த:- (தனக்குள் சோகமாக) உயிரையும் இழந்துவிடு வாள் போலிருக்கிறது... குமரி கொய்யாக்கனி! .. அவளைக் கொய்துவிடும் போலிருக்கிறது. மகாவீ:- சாவு (பிரவேசித்து) புத்தா! இந்நாட்டு மன்னன் என்ற முறையில் உன்னிடம் ஒன்று கூறவேண்டும். புத்த:- அரசே! மகாவீ:- 品 (பொன்னி மறைந்துவிடல்) О நீ அரச குடும்பத்தில் பிறந்தவன். வேற்று நாட்டு வேந்தர்களின் போற்றுதலுக்கு ஆளாக வேண்டியவன். இந்த நிலையில் நீ..... பொன்னியைக் காதலிப்பது பொருத்த மாகத் தெரியவில்லை. புத்த:- பாதாளத்தைக் குடைந்து, படாத பாடுபட்டு, பசும் பொன்னெடுத்தவனைப் பார்த்து, அதை வீசி எறிந்துவிடு அப்பனே என்பதுபோல் இருக்கிறது உங்கள் பேச்சு. ற மகாவீ:- உன் தந்தை என்ற முறையில் நான் இதை ஆமோதிக்கிறேன். மன்னன் என்ற முறையில் சட்ட ரீதியாக உங்கள் காதல் செல்லாது என்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/114&oldid=1702745" இலிருந்து மீள்விக்கப்பட்டது