பக்கம்:ஒரே முத்தம்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 புத்:- ஆம். ஒரே முத்தம் மகா:- புத்தா! (கெஞ்சி) உன்னை நம்பி வாழ்ந்தேன். நீ ஏமாற்றி விட்டாய், இந்காட்டாட்சியை யாரிடம் கொடுப்பேன்? புத்:- மக்களிடத்தில் கொடுங்களப்பா! உங்கள் அவசரத் தீர்ப்பின்படி அன்று நான் அழிந்திருந்தால்? மகா:- நீயே ஒரு வழி சொல். பிறநாட்டு வேந்தர் நம்மை வெறுக்காத வழி சொல்! . புத்:- தந்தையே! இந்த ஆட்சியை என்னிடம் கொடுத் தால்கூட நான் அரசனாக இருந்து ஆளமாட்டேன். மக்களாட்சி யாக மாற்றுவேன். மக்களின் பிரதிநிதியாக இருந்து பணி செய் வேன். மன்னராட்சியை ஒழிப்பேன். மகா:- மக்களாட்சியிலும் மண்டைகர்வம் பிடித்தவர்கள், மமதைக்காரர்கள், அதிகாரங்களை அள்ளி வீசுவார்கள்! மன்ன ராட்சியே போதும் என்று மக்கள் நினைக்குமளவுக்குக் கொடுமை களைக்கொட்டும் கோரஆட்சியாக மக்களாட்சி அமைந்தால்...? புத்:- மாற்றி அமைக்கும் அதிகாரம் மக்கள் கையில் அக் கிரமம் செய்பவர் ஆணிவேரோடு பிடுங்கி எறியப்படுவார்கள். மகா:- என்ன இருந்தாலும்... புத்:- மகுடப் பைத்தியம் உங்களை விடவில்லை. அப்பா! சாகும்வரை நீங்களே மன்னராக இருங்கள். மகா:- அதன் பிறகு நீ...? . புத்:- நான் மக்களோடு கலந்து வாழப்போகிறேன். மக் களுக்காகத் தொண்டு செய்யப் போகிறேன். மக்களின் மன மயக்கத்தை ஒழிக்கும் வரையில் எனக்கு ஓய்வு கிடையாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/116&oldid=1702747" இலிருந்து மீள்விக்கப்பட்டது