பக்கம்:ஒரே முத்தம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நகைச் சுவைப் பகுதி. காட்சி 1. இடம்:- சந்தேகம் வீடு. (பெரிய குதிர். கோழி, விரட்டி. அடுக்கு. ஏர்க் கலப்பை, மண்வெட்டி இருக்கின்றன. பாஞ் சாலியம்மன் சிலைக்குமுன் சமயோசிதம் பாடிக்கொண்டிருக்க, சந்தேகம் வருகிறான்) சந்தேகம்:- சமயோசிதம்! சமயோசிதம்! என்னா சமயோ சிதம் எப்பப் பார்த்தாலும் பூசையிலேயே இருக்கிறே? புருஷ னோடு பேசரத்துக்கு உனக்குப் புடிக்கலியா? நாம்ம எளந்தம்ப திகள் சந்தோஷமா இருக்கவேண்டிய நேரத்திலே, சதா பாஞ் சாலியம்மனும் பாட்டுமா இருந்தா, நான் என்னதான் பண்றது? சமயோசிதம்:- உங்களோடபேசிக்கிட்டே இருந்தா சரியா போச்சாக்கும் ? என் மாங்கல்யத்துக்கு ஒரு கெடுதியும் வராமல் பாதுகாக்கத்தான் பாஞ்சாலி அம்மங்கிட்டே தவங்கிடக்கிறேன். என்னாடி! மாங்கலியம் கொஞ்சம் அழுத்தமான கயிறுபோட்டா ஒரு கெடுதியும் வராமெ பத்திரமா இருக்கு! இதுக்கா பயப்படறே? கயிறுபோட்என்னாடி! மா .. சம:- என்னமோ, உங்களுக்குப் பரிகாசமா இருக்கு. திடீர்னு உங்களுக்கு ஏதாச்சும் ஆயிட்டா, நான் மஞ்சளிழந்து பூவிழந்து, மாங்கல்யமிழந்து தவிக்கவேண்டாமா? சந்:- சீரிதான். சரிதான்! மஞ்சளும், பூவும் போய்விடு மேன்னுதான் சஞ்சலப்படறே; நான் சாவறதைப்பத்தி கவலை இல்லே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/119&oldid=1702750" இலிருந்து மீள்விக்கப்பட்டது