பக்கம்:ஒரே முத்தம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 ஒரே முத்தம் சிருஷ்டிப்பதே அவரது லட்சியம். அந்தப் பாதையில், யார் குறுக்கிட்டாலும் பொருட்படுத்தமாட்டார். சு மகாவீரர்:- அதுதான் சுத்த வீரனின் பண்பு. அமைச்சரே! இனி நான் சாகமாட்டேன். என் மைந்தனின் புகழ் சீவித்திருக் கும் வரையில், என் பெயரும் சீவித்திருக்கும். புத்தன்:- அப்பா! (புத்தன் வருகிறான்) மகாவீரர் - புத்தா! இந்த ஆண்டு பிறந்தநாள் பரிசாக (புத்தன் சுற்று முற்றும் பார்க்கிறன்) ஒருவேலை தரப்போ கிறேன் உனக்கு. புத்தன்:- ஆணை மகாவீரர்:- முல்லைக்காட்டின், நமது ராஜப் பிரதிநிதியைத் தெரியுமல்லவா? புத்தன்:- ஆம். இமயா. அவர் இன்று விழாவுக்குக்கூட வரவில்லை. மகாவீரர்:- வரமாட்டான் வக்திர மூளைக்காரன். உனக்கு விபீஷணனைக்கூடத் தெரிந்திருக்குமே. புத்தன்:- நன்றகத் தெரியும். இமயாவின் ஆலோசக மந்திரி மகாவீரர்:- இருவரும் சேர்ந்துகொண்டு, முல்லைக் காட் டில் கொடுங்கோல் நடத்துகிறார்களாம். புத்தன்:- கொடுங்கோல்! நம்வம்ச வரலாற்றிலேயே இல் லாத வார்த்தை! (ரமேலாவும், குமரியும், அந்தப்பக்கம் வந்த வர்கள் நின்று கவனிக்கிறார்கள்) மகாவீரர்:- அதற்காகத்தான் உன்னை அழைத்தேன். நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/12&oldid=1702588" இலிருந்து மீள்விக்கப்பட்டது