பக்கம்:ஒரே முத்தம்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 ஒரே முத்தம் சம:- ஐயோ! என் காதிலே ஈயத்தை காச்சி ஊத்துறீங் களே! உங்க உயிருக்கு ஆபத்துன்னா என் உயிரு இந்த உடம் பிலே தங்குமா? சந்- வேறே உடம்பிலே பாஞ்சுடுமாக்கும்? சம:- (அம்மனிடம்) பாஞ்சாலியம்மா! என் மாங்கலியத்தை காப்பாத்தடி அம்மா! திரௌபதியாத்தா! என் புருஷன்தான் எனக்குச் சொத்து.நீ அஞ்சு பேருக்கு ஒரு மாங்கல்யம் போட்டி ருந்தே. அழியாத பத்தினி! நான் ஒருத்தருக்கு ஒரு மாங்கல்யம் போட்டிருக்கேன். என் மாங்கல்யத்துக்கு ஒரு கொறவும் வரா மல் காப்பாத்தடி சந்:- மாங்கல்யம் மாங்கல்யம்னு உயிரை விடு. என் மன சுக்குச் சந்தோஷமா ஒரு வார்த்தை பேசறியா? காலையிலே எழுந்திருக்கிறேன், கஞ்சியை குடிக்கிறேன் வயலுக்குப் போயி வெய்யில்லே காயறேன். அந்திசாஞ்சிவர்றேன். அகப்பட்டதைத் திங்கிறேன். நீ பூசை பண்ண ஆரமபுச்சுடறே. உன் பாட்டைக் கேட்டுகிட்டே தூங்கறேன். அப்புறம் பொழுது விடியறதுதான் தெரியுது. ஒரு நாளைக்கு என்னோடு சிரிச்சுப் பேசி சிங்காரமா விளையாடி சந்தோஷப் படுத்துறியா? உம் மழையில்லாம வெடிச்சுபோய்க் கிடக்கிற வயலும் சரி . என் வாழ்க்கையும் சரி! உனக்குக் கட்டின தாலியை ஒரு மரத்துக் கிளையிலே மாட்டி வைக்கலாம். . சம:- இந்தா பாருங்க, இதெல்லாம் பேசாதிங்க! நான் சாவித்திரி ஆகப்போறேன். சந்:- என்ன! சாவித்திரி ஆகப்போறியா? இதென்னடி வம்பு? சம:- ஆமாம் சத்தியவான் உயிரை, சாவித்திரி யமன் கையிலேருந்து வாங்கினதுமாதிரி, நீங்க செத்துப்போனாலும், உங்க உயிரை யமங்கிட்டேருந்து வாங்கப் போறேன். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/120&oldid=1702749" இலிருந்து மீள்விக்கப்பட்டது