பக்கம்:ஒரே முத்தம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 121 அதி:- காதல் பாதை கஷ்டமாகத்தான் இருக்கும். இந்த சிங்காரிக்காக, நான் இந்தச் சிறையிலே கிடந்தேனே, இதை விட ஒரு கஷ்டம் இருக்கா? சம : - ஆனா, உங்களைப் பார்த்தோடனே என் கஷ்டமெல் லாம் ஓடிப்போவுது. அதி. உன் கஷ்டம் ஓடுது. உன்னைப் பார்த்ததும் என் கஷ்டம் பறக்குது. சம:- நம்ப ரெண்டுபேரும்... அதி:- கரும்பும் எறும்பும் போல - இரும்பும் துரும்பும் போல வாழுவோம். சம :- விஷயம் வெளிச்சமாயிட்டா? அதி:- வேற ஊருக்கு ஓடுவோம். சம:- அதான் முடியாது. என் புருசன் பொல்லாதவன். வந்து கொலையே பண்ணிடுவான். அதி:- கொலை!.. நம்மைக் கொல்லும். நம்முடைய பரி சுத்தமான காதலைக் கொல்லுமா? பிறகு சொர்க்கலோகத்திலே சென்று, நாம் சுகமாக வாழலாம். பயப்படாதே! சம:- அவரும் தற்கொலை பண்ணிகிட்டு சொர்க்கலோகம் வந்தா? அதி:- வரமுடியாது. கொலைபாதகம் செய்தவன் நரகத் திற்குத்தான் போவான், கள்ளமற்ற காதலராகிய நாம், சொர்க் கத்தில் சொக்கிக் கிடக்கலாம். ல் சம:- о உங்களை ஆசை நாயகராக அடைஞ்ச என் அதிர்ஷ் டமே அதிர்ஷ்டம். அதி:- என் பேரே அதிர்ஷ்டந்தானே! 9 (இருவரும் பாட்டு, மெய்மறந்த நிலை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/123&oldid=1702759" இலிருந்து மீள்விக்கப்பட்டது