பக்கம்:ஒரே முத்தம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 ஒரே முத்தம் சம:- (திடுக்கிட்டெழுந்து) அய்யோ! சமைக்கறதுக்கு மறந்துட்டேன். சூரியன் கூட மேற்கே சாஞ்சுட்டுதே! அதி:- இந்த லோகத்திலே பசிவேறையா தெரியுது! சம:- நமக்குத் தெரியலே! வயலில் கிடக்கிற என் புருஷன்... இந்நேரம் துடிச்சுடுவானே! அதி:- புருசன் மேலே அவ்வளவு கவலை இருக்கா? சம:- கவலை ஒண்ணுமில்லே! பயந்தான்! பசி வந்தா அவன் ராட்சசன் மாதிரிதான்! இதுலே வேறே கோழிக்கறி ஆக்கிகிட்டு வரச்சொன்னான். அதி:- சரி! இனிமே என்ன செய்யப்போறே? ஒரு மாதி ரியா ராத்திரிக்குவந்து சாப்பிடுறான். சம:- அய்யோ!கொலை பண்ணிடுவான்! (யோசித்து) உம். ஒரு வேலை செய்றேன். அதி:- நீ இப்ப சமைச்சுகிட்டுப் போனாலும், நாழி ஆயிட்டு துன்னு நாலு போடத்தான் போறான். 0 சம:- பேசாம இருங்க சொல்றேன். . (ஒரு கலையத்தில் அரிசியை எடுத்துக் கொட்டிக் காண்டு, ஒருசட்டியில் கோழியை வைத்து மற்றொரு சட்டியால் மூடிக்கொன்கிறாள்) அதி:- இது என்ன வெறும் அரிசியை கொட்றே?... உயிர்க் கோழியைக் கவுக்கறே? சம:- அப்புறம் சொல்றேன். (புறப்படுதல்) அதி:- அப்ப நான் போகட்டுமா? விபீஷணருக்குப் பெண் தேடப் புறப்படணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/124&oldid=1702760" இலிருந்து மீள்விக்கப்பட்டது