பக்கம்:ஒரே முத்தம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 125 சந்:- (தனக்குள்) பதிவிரதை மாதிரி பாசாங்கு பண்ணி, என்னை ஏமாத்திட்டாளே பாவிசெருக்கி!வரட்டும் பார்க்கிறேன். (உட்காருகிறான். சமயோசிதம் கலையம் மூடிய . சட்டியுடன் வருதல். சந்தேகம் அவளை ஏற இறங்க உற்றுப்பார்க்கிறான்) சம:- என்ன பாக்கிறீங்க? சந்:- சந்தேகப்படறேன், சரியா நில்லு. சண்டாளி! என்னை ஏமாத்திபிட்டாயே! சம:- என்ன சொல்றீங்க? சந்:- என்ன சொல்றாங்க? ஏன் சாப்பாடு கொண்டுவர இவ்வளவு நாழி? பதில் சொல்லு. சந்தேகப்பட்டு கேக்கிறேன். சம:- அரிசி வேக மாட்டேன்னுட்டுது! சந்:- ஏன்? அரிசிக்கு என்ன கோபம்? சந்தேகப்பட்டு கேக்கிறேன், சொல்லடி! சம:- சங்கடமான சந்தேகமாயிருக்கே! சந்:- நீ ஒரு ஆம்பளையோட பேசிகிட்டு இருந்தியா? சந் தேகப்பட்டு கேக்கிறேன். சொல்லு! சம:- இருந்தேன். சந்:- உம்..... ஆதானே கேட்டேன்! எப்ப பேசிகிட்டு இருந்தே? சம:- காலையிலே பேசிகிட்டு இருந்தேன். சந்:- உம். அவன் பேரு? சம:- சொல்லக்கூடாது. சந்:- சொல்லடி கள்ளி! சம:- உங்கபேரை நான் சொல்லலாமா? சந்:- அதைக் கேட்கலேடி அரட்டை!வேறு ஒரு ஆம்பளை உனக்கு ஆசைநாயகன் உண்டா? இல்லையா? சம:- ஆம்பளையா? அன்னிய ஆம்பளை முகத்தை நான் பார்த்ததே கிடையாதே...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/127&oldid=1702763" இலிருந்து மீள்விக்கப்பட்டது