பக்கம்:ஒரே முத்தம்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

live சுற்றிய here 126 ஒரே முத்தம் சந்:- பசப்பாதே!.. சந்தேகப்பட்டு கேக்கிறேன். பட் பட்டுன்னு பதில் சொல்லு! சம:- உங்களுக்காகவே அல்லும் பகலும் அம்பாள்கிட்டே தவங்கிடக்கிறேன். அதிர்ஷ்டம் வரணும் வாணும்னு வேண்டிக் கிறேன். பாஞ்சாலியமமா! பாவமான வார்த்தையெல்லாம் என காதில் விழுதே! சந்:- வேஷக்கார நாயே! விபசாரி! சம:- இரண்டுபேர் முகத்தைத் தவிர நான் வேறு முகத் தைப் பார்த்ததில்லியே! அய்யோ தெய்வமே! சந்:- இரண்டுபேரு முகமா? ஆ! அய்யோ! என் கொலப் பெருமையே போச்சு! சம:- உங்கள் முகம் ஒண்ணு. அம்பாள் முகம் ஒண்ணு. சந்- வேடிக்கையா பேசறே? இதபாரு! உன சங்கதி யெல்லாம் தெரிஞ்சுபோச்சு, உண்மையைச் சொன்னா பிழைச் சுக்குவே. இல்லை, இந்த மர்புட்டியாலேயே உன் மண்டையைப் பொளந்துடுவேன் (ஓங்குதல்) சம:- ஏ! பாஞ்சாலியம்மா! என் புருசன் உண்மையை சொல்லச்சொல்றாரு!நான் பதிவிரதை என்பது உண்மையானால் நான் சமைச்சிவந்த சோறு அரிசியாகவும், குழம்பு வச்ச கோழி உயிராகவும் போகக்கடவது! எல்லாம் உ~ . (தூக்கிவீசுகிறான். அரிசி கொட்டுகிறது. கோழி பறக்கிறது) காட்சி 3. இடம்:- சந்தேகம் வீடு. (பெரிய குதிர், கோழி, ஏர், கலப்பை, விரட்டி அடுக்கு. கோழியை வைத்துக்கொண்டு "புறாப் பாட்டு"மெட்டில் கோழியால் தப்பித் ததை சமயோசிதமும், அதிர்ஷ்டமும் பாடி கொண்டிருக்கையில், சந்தேகம் கதவைத் தட்டிக் கூப்பிடுகிறான். அதிர்ஷ்டத்தைக் குதிரில் ஒளியவைத்துக் கதவைத் திறக் கிறாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/128&oldid=1702764" இலிருந்து மீள்விக்கப்பட்டது