பக்கம்:ஒரே முத்தம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் சந்: 127 சாவித்ரீ! சம:- ஏன் சத்தியவானே? சந்:- இந்தக் குதிரை வித்துட்டுப் பெரிய குதிர் வாங்க ணும்னு சொன்னில்ல! சம:- ஆமாம்! சந்:- இதை விலை பேசி முடிச்சிட்டேன். வாங்கிறவன் வெளியே நிற்கிறான். இப்ப இதைத் தூக்கியாகணும். சம:- உங்களுக்கு முன்னேயே நான் வேறே ஆளுகிட்டே வித்துபிட்டேன். ஓட்டைகீட்டை இருக்கான்னு உள்ளே இறங்கி பார்த்துகிட்டு இருக்காரு! (குதிரிடம்) என்னங்க! இன்னுமா பாக்கிறீங்க? அதி:- இல்லை...பார்த்தாச்சு. (வெளியே வந்து) குதிரு நல்ல வசதியான குதிரு. இது இல்லேன்னா உங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குமே? சம :- ஆமாம்! (அவனிடம் கேட்கிறான்) வசதி ரொம்பத் தான்! ஆனா ரொம்பச் சின்னது. இதைவிடப் பெரிசா இருந்தா தான் ஒரு ஆளு கஷ்டமில்லாமே உள்ளே இறங்கலாம் சந்:- இறங்கக் கஷ்டமே இல்லியே. நான் எத்தனையோ தடவை எறங்கி நெல்லு தள்ளியிருக்கேனே. அதி - நெல்லு தள்ள இறங்கலாம்... சந்:- இந்தா பாருங்க! எவ்வளவு தாராளமா இறங்க முடியுதுன்னு! (இறங்குகிறான். அவன் குதிரில் இறங்கியதும் அதிர்ஷ்டம் சமயோசிதத்தை அணைத் துக் கொள்ளுதல்) சந்:- (உள்ளிருந்து) எப்படியிருக்கு பாத்தீங்களா குதிரு, வழ வழன்னு? அதி:- (சமயோசிதத்தின் கன்னத்தைத் தடவி) ஆமாம் கண்ணாடிமாதிரி இருக்கு! சந்:- (உள்ளிருந்து) இதுக்கு ஒரு குத்தம் சொல்ல முடி யாதுங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/129&oldid=1702765" இலிருந்து மீள்விக்கப்பட்டது