பக்கம்:ஒரே முத்தம்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 13 மகா:- புத்தா! ஜாக்கிரதை! குமரியை அழைத்துச் செல் கிறாய். விபீஷணன் இமயா வெறியாட்டங்கள், மது, மங்கை இரண்டுந்தானாம்! (புத்தன் வணங்கிச் செல்ல) மகா:- புத்தா! ஆதாரமில்லாமல் யாரையும் அவஸ்தைப் படுத்தாதே! புத்தன்:- தந்தையே! நீதியின்மேல் ஆணை! நேர்மை தவறி நடக்கமாட்டேன். மகா:- வாழ்க !..... வெல்க! (எல்லோரும் செல்லல், குமரியை ஜாடையாகப் பார்த்து, ரமேலா சிரித்தல்.குமரியின் ஆனந்த கீதம்) காட்சி 4. இடம்:- இமயாவின் மாளிகை (மதுவருந்தும் காட்சி- இரு பெண்களின் சில நிமிட நடனம்) விபீஷ:- மது, மங்கை, இரண்டுந்தான் கவலை தீர்க்கும் மருந்துகள். இமயா:- ஆமாம். மருந்துகள்! கடலெல்லாம் மதுவாக கி விட்டால்.......... விபீஷ:- மணல்களையெல்லாம் மங்கையராக்கி, மதுக்கட லில் ஜலக்கிரீடை செய்யலாம்! இமயா:- மாளிகை முழுவதும் மாதர்கள், மாதர்கள் கையிலே மதுக்குடங்கள். விபீஷணரே! அந்த இடம் ......? விபீஷ:- அசல் இந்திர லோகந்தான்! மதுக்கோப்பைகள்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/15&oldid=1702592" இலிருந்து மீள்விக்கப்பட்டது