பக்கம்:ஒரே முத்தம்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 ஒரே முத்தம் அதைப் பிடித்திருக்கும் மலர்க் கரங்கள், அடா டா டா! இன்பம்! இன்பம்! இன்பம்!! இமயா:- இன்பம்! இன்பம்! இன்பம்!! மதுவை அந்த மாதர்களின் வாயில் ஊற்றி, அதை உறிஞ்சிக் குடித்தால்? விபீஷ- மலரில் வழியும் தேனை, வண்டு குடிப்பதுபோல், மனோகரமாய் இருக்கும். இமயா :- பேஷ்; விபீஷணரே! கவிஞனைப்போல் பேசு கிறீர். விபீஷ- (மதுவைக்காட்டி) எல்லாம் இந்த மகேஸ்வரி யின் அருள். இமயா - ஆஃகா! அருளே அருள்! (ஒரு பெண்ணின் சிலையை உற்று நோக்க, அது மகாவீரர் போலத் தெரியவே) இமயா :- மகாராஜா! மகாவீரர் நம்மையே பார்க்கிறார். மடையர். விபீஷ:- (சிரித்தபடி) மண்ணாங்கட்டி ராஜா! (சிலையை உதைக்கவே, அது விழுகிறது) இமயா:- நன்றாகச் சொன்னீர். இந்தச் சிலை இருக்கு மிடத்தில், என் சிலையல்லவா இருக்க வேண்டும்? விபீஷ:- இங்கென்ன! இமயாவை இன்பபுரியின் ரத்ன சிம்மாசனத்தில் இருக்கவைக்கிறேன். இமயா:- இருக்கவைப்பீர். ரத்ன சிம்மாசனம்! அதனருகே பொன் குடத்தில் புதிய மது. வைரக் கிண்ணத்தால், அதை மொண்டு என் வாயில் ஊற்றும் வனிதாமணிகள், விபீஷணரே, விரைவில் அந்தப் பதவி வர வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/16&oldid=1702601" இலிருந்து மீள்விக்கப்பட்டது