பக்கம்:ஒரே முத்தம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஒரே முத்தம் விபீஷ: பண வசூல், நடந்துகொண்டுதானிருக்கிறது. போரை முன்னிட்டு, நம் பொக்கிஷத்தைப் பாதி நிரப்பிவிட் டேன். (மதுவைக் கோப்பையில் ஊற்றுகிறான்) எங்கு பார்த்தா லும் நம் ஆட்கள், வரி வசூல் செய்கிறார்கள். இமயா :- வரியா? விபீஷ: ஆம்! பிறந்தால் வரி, வாழ்ந்தால் வரி! இறந்தா லும் வரி! ஒரே வரி மயம். இமயா:- வரி! மகாராஜாவுக்குத் தெரிந்தால், மகா ஆபத்தாயிற்றே! விபீஷ:- பைத்தியம்! உளறாதீர்! மகாராஜாவின் ஆணி வேரையே பிடுங்க அருமையான திட்டம் போட்டிருக்கிறேன். இமய: குடிஜனங்கள் சக்ரவர்த்தியிடம் முறையிட்டால்? விபீஷ:- குடிஜனங்கள்! குடலைப் பிடுங்கிவிடுவேன். வாயைத் திறக்கவே மாட்டார்கள்! விபீஷ:- உஸ், பேசாதீர்! முல்லைக் காட்டின் சாதாரண ராஜப் பிரதிநிதி இன்பபுரியின். மகுடம், இதில் எது பிரதிநிதி....... வேண்டும்?? (இரண்டு மதுக்கோப்பைகளை. தனித் தனியே சுட்டிக் காட்டுகிறான்) இமய:- மகுடம்! மகுடம்! இன்பபுரி மகுடம்! விபீஷ- மகுடம்! இமய:- மகுடம்! விபீஷ:- மது! இமய:- மய:- மது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/18&oldid=1702603" இலிருந்து மீள்விக்கப்பட்டது