பக்கம்:ஒரே முத்தம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 ஒரே முத்தம் 1-வது கா:- நில்லுங்கள்! பொன்:- யார் நீங்கள்? 1-வது கா:- நாங்கள் வேடர்கள். 2-வது கா:- வேட்டையாடுவதில் வெகு சமர்த்தர்கள். 3-வது கா:- ஆமாம். எங்கள் குறிக்கு எந்த மானும் தப்பியதில்லை. பொன்:- இங்கு வந்த விஷயம்? 1-வது கா:- எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான். பொன்:- நன்மையா? 2வது கா:- ஆமாம், நீங்கள் சகல சௌபாக்கியங்க ளோடு, சகல சம்பத்தோடு, சகல செல்வாக்கோடு, சகல சல்லாபங்களும் பெற்று வாழ, நாங்கள் ஆசைப்படுகிறோம். பொன்:- வளர்த்தவேண்டாம், சீக்கிரம். , 1-வது கா:- மிடுக்காகப் பேசினாலும், மிக அழகாக இருக் கிறது. 3-வது கா-விபீஷணரும் இதைத்தான் ரசிப்பார். ஒரு தோழி:- (ஆத்திரமாக) நிறுத்து உ ன் கிண்டலை! உன் இவள் கிராமத் தலைவரின் மகள். பொன்னி! வா போவோம். 1-வது கா:- பொன்னீ, ஹஹ்ஹ! போகவிட எண்ண மில்லை. (பொன்னி முதலியோர் நகரவே) 1-வது கா:- நாங்கள் ராஜாங்க அதிகாரிகள். முல்லைக் காட்டில் நாங்கள் வைத்ததுதான் சட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/28&oldid=1702614" இலிருந்து மீள்விக்கப்பட்டது