பக்கம்:ஒரே முத்தம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 ஒரே முத்தம் புத்த:- ஆமாம். விபீஷண வண்டுக்குக் காமதாகம்!தேன் மலர் தேடுவதற்காகச் சில பூச்சி வண்டுகள் பறந்துவந்தன. மலையன்:- என்னா? என்னா? வண்டாவது நண்டாவது? ஏம்மா, இவரு யாரு? பொன்;- அப்பா! இவர், என்னை இம்சிக்கும்போது...... மலையன்:- ஆ! இம்சித்தானா? சாது போலிருக்கானே? சண்டாளன்! (பொன்னி தடுக்க, கேளாது புத்தன்மேல் பாய்கிறான்.) 'பொன்னி விடு என்னை' 99 பொன்;- அவசரப்படாதீர்கள், இவரில்லை. அந்தப் பேடி கள் ஓடிவிட்டார்கள். மலையன்:- இப்பொழுது சொன்னியே, இம்சித்தான்னு. பொன்:- அவர்கள் என்னை இம்சிக்கும்போது, இவர் காப் பாற்றினார் என்றேனப்பா! மலையன் :- ஓ! அப்படியா? வணக்கங்க! என் மவளை மலைப்பாம்பு வாயிலேருந்து மீட்டீங்க. ஐயோ, நீங்க இல்லைன்னா இந்நேரம் என் குடும்பமே நாஸ்தியாகிவிடும். தெரியாமெ ஏதோ சொல்லிட்டேன். புத்த;- பரவாயில்லை, இந்த மாதிரி பாக்கியம் கிடைக்க வேண்டுமே! மலையன்:- உம், தெய்வந்தான் கண்பார்த்திருக்கு. பொன்:- ஆமப்பா! இவர்கூட தெய்வலோகத்திலிருந்து... புத்த:- அப்படித்தான் பொன்னி, உன்னைக்கூட அங்கு பார்த்திருக்கிறேன்; இல்லை, இல்லை உன் ஜாடையாக ஒரு பெண்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/30&oldid=1702616" இலிருந்து மீள்விக்கப்பட்டது