பக்கம்:ஒரே முத்தம்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ஒரே முத்தம் புத்த:- ஆம்! உன்னைப் போலவே நான். உன் உள் ளத்தைப்போலவே என் உள்ளம். ஜாதிவேறுபாட்டால் இவை மாறாதவை. பொன்னி:- ஜாதிக் கொடுமை, எத்தனையோ ஒன்றுபட்ட உள்ளங்களைத் துண்டித்திருக்கிறதே. மலைய:- என்ன? என்ன? (எங்கோ கவனித்திருந்த] பொன்னி:- கதைகளில் படித்திருக்கிறேன், ஜாதியை எதிர்த்து உயிரையே தியாகம் செய்தவர்கள் எத்தனையோ பேர். அதைச் சொல்லுகிறேன் அப்பா. புத்தன்:- ஆமாம், நானுங்கூடப் படித்திருக்கிறேன். பொன்னி:- படிப்பது சுலபம். ஆனால் அதன்படி நடப்பது கஷ்டம். புத்த:- நான் அந்த தியாகிகளின் பாதையில் கால்வைத் துப் பல நாட்களாகின்றன. . [மலையன் அவசரமாக] மலைய:- உம், பொன்னி! புறப்படு (புத்தனிடம்) நாங்க வருகிறோம். உங்கள் உதவிக்கு மறுபடியும் புத்த:- வேண்டாம். நினைவிருந்தால் போதும். பொன்னி! வருகிறேன். (பிரியமுடியாத பிரிவு) காட்சி 9. இடம்:- விபீஷணன் அறை (குமரி நிற்கிறாள். விபீஷணன் படுக்கையில் சாய்ந்திருக்கிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/32&oldid=1702629" இலிருந்து மீள்விக்கப்பட்டது