பக்கம்:ஒரே முத்தம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் விபீஷ:- பெயர் என்ன சொன்னாய்? குமரி:- மின்னல். 31 விபீஷ- பொருத்தம், பொருத்தம்! கண்ணின் ஒளியில் மின்னல், கன்னத்தின் விளிம்பில் மின்னல், இடுப்பின் ஒவ்வொரு அசைவிலும் மின்னல், வண்ணாத்திப் பூச்சியே!உன்னை வருணிக்க வார்த்தைகளே கிடையாது. (மதுவைக் கையில் கொடுத்து) குமரி:- இதை அருந்துங்கள். வார்த்தைகள், உங்களை அறியாமலேயே வந்துவிழும். விபீஷ:- ஆமாம், நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை? குமரி:- எனக்குக் கல்யாணம் ஆகாதுங்க. விபீஷ:- ஏங்க? குமரி: - ஒரு சபதம் வந்து குறுக்கே நிற்குதுங்க. விபீஷ:- சபதமா! அதென்ன சங்கடம்? குமரி:- கல்யாணம் பண்ணிக்கிட்டா, ஒரு ராஜாவைக் கல்யாணம் பண்ணிக்கிறது. இல்லேன்னா,கன்னியாகவே இருந் துடறது. (ம்) விபீஷ:- அப்படியானால், உன் சபதம் பலித்துவிட்டது. குமரி- நிஜமாகவா?• விபீஷ :- நிஜம், நிஜம்! குமரி:- (மதுவை ஊற்றிக்கொடுத்து) உம், நிதானித்துச் சொல்லுங்க. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/33&oldid=1702630" இலிருந்து மீள்விக்கப்பட்டது