பக்கம்:ஒரே முத்தம்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ஒரே முத்தம் விபீஷ:- இன்று, நான் முல்லைக்காட்டு ராஜப்பிரதிநிதி இமயாவின் பிரதம மந்திரி! அடுத்தமாதம், இன்பபுரி சாம்ராஜ் யத்தின் சக்கரவர்த்தி. குமரி:- நல்ல...அதிர்வேட்டு! நீங்களாவது அரசராவது ஆகவாவது; விளையாடுறீங்க. விபீஷ:- விளையாடுகிறேன்! இன்பபுரியின் மகாராணி யோடா விளையாடுவேன்? இதைக் கேள், மகாராஜா மகாவீரர் ஆட்சி மங்கிவிட்டது. இன்பபுரியின் மகுடம், இனி விபீஷணன் பரம்பரைக்கு. குமரி:- கனவா இருந்தாலும், அழகா இருக்குங்க! en di விபீஷ:- நீ நம்பமாட்டாய். சக்கரவர்த்தி விபீஷணரோடு சரியாசனத்தில் வீற்றிருக்கப் போகிறாய்! அது வரையில் நம்ப மாட்டாய். குமரி:- நாகலோகம் போவதாக தவளை சொன்னால் நம்ப முடியுமா? (மதுவை மீண்டும் தருதல்) . விபீஷ:- விபீஷணன் தவளையல்லடி; கருடன், கருடன்! நாகராஜனையும் கொல்லுவான், நாகலோகம் போவான், (நெருங்கி) மின்னல்! வா! குமரி :- ( ஒதுங்கி) மகாவீரர் இளிச்சவாயரா? அவரு சேனைக்கு ஜவாப்பு சொல்லமுடியுமா? கோட்டைக்குள் நுழை யத்தான் ஆகுமா? ஊஹும்! ாேமகாவ விபீஷ:- நம்பமாட்டாயா என்னை? குமரி:- ஊஹும்! பொய்யெல்லாஞ் சொல்றீங்க. என் சபதத்தைக் கெடுக்க பாக்கறீங்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/34&oldid=1702631" இலிருந்து மீள்விக்கப்பட்டது