பக்கம்:ஒரே முத்தம்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 33 விபீஷ:- நான் சொல்வது பொய்! சரி, இந்தக்கடிதங்கள் சொல்வது பொய்தானா? கண்ணைத் திறந்து பார்! (எடுத்துக் காட்டுகிறான்] மாணிக்கக் கோட்டை தளபதி மாதவனுடைய கடிதம் இது. இன்பபுரிக்கு எதிராக என்னோடு சேர்ந்துள்ள மாபெரும் வீரன். இதோபார், சித்திரக்கோட்டை சிற்றரசன் சிங்கநாகன்கடிதம். அந்தச் சிங்கம் என்ன எழுதியிருக்கிறான் தெரியுமா? பத்தா யிரம் வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கிறானாம்: இன்பபுரிக் கோட் டைக்குள் பிர வேசிக்க நேரம், வழி, எல்லாம் தயார்! குமரி:- கோட்டைக்குள்ளா? ஊஹும். விபீஷ:- பைத்யம், பைத்யம்! இதோ எல்லப்பன் என்ற எலி, கோட்டைக்குள்ளே இருந்தே இதை அனுப்பியுள்ளான். இன்னும் சந்தேகமா ? இந்தப் பாதையிலே சென்றால், கோட்டை தவிடு பொடி! ஹ ஹ ஹா! குமரி: - நான் அதிர்ஷ்டக்காரிதான். வீபீஷ:- (நெருங்கி) இன்பபுரியின் இராணி, மின்னல்! மின்னல்! குமரி:- ஒரு வேளை, உங்கள் இமயா அரசராக வந்து விட் டால்? விபீஷ - முடியாது, முடியாது. இமயா என் கைப்பொம் மை, காரியம் சாதிக்க ஒரு கருவியாக உபயோகிக்கிறேன். என் வெற்றிக்குப் பிறகு, அவன் கருவேப்பிலை. நாட்டாசையைக் கிளப்பிவிட்டேன், நாக்கைத் தட்டிக்கொண்டிருக்கிறான் மடை யன்! மன்னர் பதவிக்கு இவனா லாயக்கு? மண்டூகம்.. மின்னல்! நான் அரசனான அன்றைக்கே, அப்பொழுதே இமயாவின் தலை உருண்டுவிடும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/35&oldid=1702632" இலிருந்து மீள்விக்கப்பட்டது