பக்கம்:ஒரே முத்தம்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஒரே முத்தம் வைக்கும் மனித மிருகம் மகாராஜாவின் சோற்றைத் தின்று அவருக்கே துரோகம் நினைக்கிறான். குமரி:- இது சிங்கநாகன் கடிதம். புத்த:- சண்டமாருத நடையில் எழுதியிருக்கிறான். இந் தப் புலிகள் புத்தன் இருப்பதை மறந்துவிட்டார்கள். 1 வது வீர:- இளவரசே! அமோகமான ஆதாரங்கள். புத்த:- ஆம்! குமரிக்குச் சரியான பரிசு தர வேண்டும். குமரி:- பரிசு வேண்டி நான் பணிபுரியவில்லை. (தனியிடத்தில் காலிகள் ரகசியமாம்) 1 வது கா:- இளவரசன் புத்தன்! 2-வது கா:- ஆமாம்! அந்தத் தெரு நடனக்காரி யார்? 1-வது கா:- எல்லாம் வேஷம். இதை உடனே விபீஷண ரிடம் தெரிவிக்க வேண்டும். (இங்கே) புத்தன்:- சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அவர்களைக் கைது செய்யவேண்டும். ஆதாரங்களுக்காக அலைந்தோம். அகப்பட்டுவிட்டன. இனி அந்த விஷமக்காரர்களை விட்டு வைக்கக்கூடாது. நாளை காலையில் நமது வேலையை முடிக்க வேண்டும். நாட்டுக்கும் சமூகத்துக்கும் கேடு செய்யும் அந்த நாகசர்ப்பங்களின் நச்சுப்பற்களைப் பிடுங்கி எறியவேண்டும்! தேசத் துரோகிகள், சமூகத் துரோகிகள்,நாசகாலர்கள். அவர் களைச் சுட்டெரிக்க வேண்டும்! விட்டுவைப்பது விவேகமல்ல! வீரர்களே! வீரர்கள் - ஒழிப்போம் துரோகத்தை! (அனைவரும் முழக்குகின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/40&oldid=1702638" இலிருந்து மீள்விக்கப்பட்டது