பக்கம்:ஒரே முத்தம்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 விபீஷ :- உம்....! ஒவ்வொன்றாகச் சொல்! பார்க்கிறேன். ஒரே முத்தம் எண்ணிப் சித்ரா:- எண்ணிப்பாருங்கள், உங்கள் காமவெறிக்கு ஆளாகி வாழ்விழந்த கன்னிப் பெண்கள் எத்தனைபேர்? எண் ணிப் பாருங்கள். விபீஷ:- கற்பழித்தேனா? இராமனைப்போல் ஏகபத்தினி விரதனாகிய நானா? சித்ரா:- இராமனென்ன? கற்பைக் காப்பாற்றுவதில் நீங் கள் இந்திரனுக்கு அண்ணனாயிற்றே. தெரியும். விபீஷ:- பெண்கள் அகல்யாவாக இருந்தால் ஆண்களும் இந்திரனாக இருக்கவேண்டியதுதானே..... சித்ரா :- கதை கிடக்கட்டும், உங்கள் காமசேஷ்டைகள் எவ்வளவு கொடுமைகளைச் சிருஷ்டிக்கின்றன. யோசித்துப் பாருங்கள். விபீஷ:- என்ன சித்ரா! விளங்காத பாஷைகளை அள்ளி வீசுகிறாய். காமசேஷ்டையாவது, கொடுமையாவது, நானாவது செய்யவாவது, நான் ஏக பத்தினிக் கொள்கையில் சாக்ஷாத் பரந்தாமன். . சித்ரா;- பரந்தாமன் கொள்கையை கோபிகா ஸ்திரீ களிடமல்லவா கேட்கவேண்டும்! விபீஷ:- சித்ரா நீ என்னதான் சொல்கிறாய்? உன் கண வன் விபீஷணன் காமாந்தகாரன், காதகன், கடையன், இது தானே உன் தீர்ப்பு? சித்ரா:- தீர்ப்பு, இந்த மோதிரத்தைக் கேளுங்கள் சொல்லும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/42&oldid=1702640" இலிருந்து மீள்விக்கப்பட்டது