பக்கம்:ஒரே முத்தம்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 41 விபீஷ:- (திகைத்து) இந்த மோதிரம். (விரல்களைத் தட வித் தேடுகிறான்.) சித்ரா:- தெரு நடனக்காரிக்குப் போட்டீர்களே, அந்த திவ்ய மோதிரம். கள். (வீபீ ஷ ணன் ஸ்தம்பித்து நின்றதும், இரவு நினை வுகள் சில உருண்டோடுதல், மயக்கம் தெளிந்தவனுய்.) விபீஷ - ஏமாற்றம்! எங்கே அவள்? சித்ரா:- அவள் அப்பொழுதே பறந்துவிட்டாள். விபீஷ:- இரு கள்ளிகளும் என்னைச் சதிசெய்திருக்கிறார் [சித்ரா கலக்கம் விபீஷணன் ஆத்திரம். பயங்கர மான அமைதி நிலவுகிறது. இரு காலிகள் வருதல்.] 1 வது கா:- எஜமான்! நம்மிடமிருந்த சதிக் கடிதங்கள் புத்தனிடம் சிக்கிவிட்டன. விபீஷ:- புத்தனா? என்ன உளறுகிறாய்? 2வது கா.-ஆர்! இளவரசர் மாறுவேடத்தில் துப்பறி கிறார். தெரு நடனக்காரி வேடத்தில் ஒரு பெண் கடிதங்களை அபகரித்திருக்கிறாள். (விபீஷணன் மனதில் புயல்.) விபீஷ- சித்ரா! சரியான துரோகம் செய்துவிட்டாய். உம். சிங்கத்தின் குகைக்குள்ளேயே சதிநடந்துவிட்டது. சதியை நடத்தியவள் என் மனைவி எதிரியின் கையாள். பத்தினிபோல் வேஷம் போட்ட பாசாங்குக்காரி. சித்ரா:- வீண் பழி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/43&oldid=1702641" இலிருந்து மீள்விக்கப்பட்டது