பக்கம்:ஒரே முத்தம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 ஒரே முத்தம் விபீஷ:- விஷத்திடாகமே! பேசாதே! விபசாரிகூடத் தன் கணவனை இப்படிக் காட்டிக் கொடுக்கமாட்டாள். என் வாழ் வுக்குத்துணை என்று வந்த வஞ்சகி! என் வாழ்வையே இருளாக்கி விட்டாய் துரோகி! று சித்ரா:- துரோகி! நான் துரோகியா? விபீஷ:- யாரைக் கேட்கிறாய்? உன் கழுத்தில் பிரகாசிக் கும் அந்தத் தாலியைக்கேள்! முகத்தில் பூசியிருக்கிறாயே! அந்த மஞ்சளைக்கேள்! நெற்றியில் பொறித்திருக்கிறாயே அந்தப் பொட்டைக்கேள்! யாரைக் கேட்டாலும் ஒரே பதில், கண வனைக் காட்டிக் கொடுத்தவள். துரோகி! சித்ரா :- சுவாமி! நான் காட்டிக்கொடுக்கவில்லை. விபீஷ - கடிதங்களை மட்டும் எடுத்துக் கொடுத்தாய் சித்ரா ! நீ இந்த வேலை செய்வதைவிட விஷத்தை என் உண வில் கலந்திருக்கலாம். நான் தூங்கும் போது நான் தூங்கும்போது என் தலையைத் துண்டித்திருக்கலாம். அல்லது அன்பாக உன்னோடு கொஞ்சும் போது என் நெஞ்சை நெறித்திருக்கலாம். சித்ரா:- சுவாமி! எனக்கு ஒன்றுமே தெரியாது! ம வீபீஷ:- தெரியாது. தெருப்பாடகி போல இரவெல்லாம் என்னோடு நடித்திருக்கிறாயே, இதுகூடத் தெரியாதா? சித்ரா:- நடித்தது உண்மை, ஆனால் விபீஷ:- கடிதங்களைக் கைப்பற்றவில்லை கைகாரி! சித்ரா:- அவள் களவாடியிருக்கலாம். நான் கவனிக்க வில்லை. விபீஷ இரவு, என் ஆசையில் குறுக்கிட்டு அதை அரும் பிலேயே அழித்தாய் தங்க வீணையை மீட்டும்போது அதன் தந்திகளை அறுத்து விட்டாய். அவளைத் தப்பி ஓடச் செய்தாய்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/44&oldid=1702642" இலிருந்து மீள்விக்கப்பட்டது