பக்கம்:ஒரே முத்தம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 ஒரே முத்தம் விபீஷ:- வார்த்தையை மட்டுமா? என் வாழ்வு, வாழ்வின் லட்சியம், எல்லாவற்றையும் காப்பாற்றிவிட்டாய். சித்ரா:- அன்பா! விபீஷ:- சித்ரா! ஏன் தயக்கம்? என்ன கேட்கிறாய்? சித்ரா:- சில கேள்விகள். பதில் வேண்டும். விபீஷ:- பரீக்ஷை வைத்திருக்கிறாயா? கேள், சித்ரா:- இந்திரன் அயோக்கியனாம்! அதற்குக் காரணம்? விபீஷ:- காமவெறி என்பார்கள். சித்ரா:- இராவணன் தம்பியின் பெயர்? விபீஷ:- கும்பகர்ணன். சித்ரா:- அவனுக்கு இளையவன்? விபீஷ- விபீஷணன்! சித்ரா:- அவனைச் சிலர் வெறுக்கிறார்களே, காரணம்? . விபீஷ:- அண்ணனைக் காட்டிக்கொடுத்தானாம். சித்ரா:- இல்லை அதைவிட மேலான, அருமையான நாட் டைக் காட்டிக்கொடுத்தானாம். விபீஷ- சித்ரா! பீடிகை பலமாக இருக்கிறதே! சித்ரா:- அன்பா! உங்கள் வாழ்வில் வளைவு ஏற்பட்டால் என் வாழ்வு வாடிவிடுமல்லவா? விபீஷ :- நல்ல கேள்வி. நல்ல பதில். சித்ரா! சொல்ல வந்ததைச் சுருக்கமாகச் சொல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/54&oldid=1702660" இலிருந்து மீள்விக்கப்பட்டது