பக்கம்:ஒரே முத்தம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 55 இமய:- நடனமாடிக்கொண்டே மதுவைக் கோப்பையில் மொண்டு மொண்டுத் தருகிறாள் அந்த மங்கையர்க்கரசி. விபீஷ:- இமயா! இனிப் பொறுக்க முடியாது. அவளைக் காணவேண்டும். ஒரே வார்த்தையில் பதில்; எங்கே அவள்? இமய:- இதோ வருவாள் (சேவகனிடம்) ஏய்! அழைத்து வா அவளை. (சேவகன் போக (சேவகன் போக ஆரம்பிப்பதற்குள் இளவரசர் புத்தனும், வீரர்களும், குமரியும் பிரவேசிக்கிறார்கள்) இமய :- (திகைத்து) இளவரசே! அமருங்கள், அமருங்கள். விபீஷ:- அமருங்கள். (உபசரிக்கிறார்கள்) இமய ;- இளவரசே! என்ன திடீர் விஜயம்? புத்த - உங்களை, வந்தேன் அரண்மனை விருந்துக்கு அழைக்க இமய விருந்தா? (ஆசையுடன்) புத்த - ஆம். உங்கள் ஆட்சி முறையைப் பாராட்டுவதற் காக ஏற்பாடு செய்துள்ள விருந்து. இமய:- அதற்கு இளவரசரா வரவேண்டும்? ஓலை அனுப் பினால் ஓடி வருகிறேன். WO புத்த:- ராஜப் பிரதிநிதி இமயாவை அப்படி அலட்சிய மாகவா அழைப்பது? D இமய:- உம்...... ஆஃகா! என் பாக்யமே பாக்யம். புத்த:- நீரே தேடிக்கொண்ட பாக்யம். கையை நீட்டும். (சிப்பாயை ஜாடை காட்ட, விலங்கு கண்ட இமயா) இமய:- ஆ! என்ன?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/57&oldid=1702664" இலிருந்து மீள்விக்கப்பட்டது