பக்கம்:ஒரே முத்தம்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் 57 மய:- இளவரசே! எல்லாம் இவர் ஏற்பாடுதான், எனக் கொன்றும் தெரியாது. விபீஷ:- உஸ்.... கோழையே! பேசாதீர். இம்ய:- பேசவில்லை. விபீஷ:- பச்சைக் குழந்தைகளாம், பாட்டாளிகளாம், பரிதாபமாம், சதியாம், வேலையாம்! புதுப்புது வேட்டுகள் இந்த நிரபராதிகளிடத்தில். புத்த:- நிரபராதிகள்! பசுவை ருசி பார்த்த வேங்கை, ரத்த நாக்கோடு வேதாந்தம் பேசுகிறது! விபீஷணரே! வரி கொடுக்காதவரை வாழ விடாதே என்று ஆணையிட்ட நீர் நிர பராதி! விபீஷ:- குற்றவாளி என்பதற்கு என்ன ஆதாரம்? புத்த:- ஆதாரமா? அதை விசாரணைமண்டபத்தில் அளிக் கிறேன். உம்.... கொண்டுபோங்கள்! (வீரர்கள் இழுத்துச் செல்லல்) புத்த:- (குமரியிடம்) குமரி! நீங்கள் முன்னே செல்லுங் கள். நான் பிறகு வருகிறேன். குமரி:- தனியாகவா? புத்த:- ஆமாம். காட்சி 16. (போகின்றனர்) 154 இடம்:- பொன்னியும் புத்தனும் முன்பு சந்தித்த அதே இடம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/59&oldid=1702666" இலிருந்து மீள்விக்கப்பட்டது