பக்கம்:ஒரே முத்தம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 ஒரே முத்தம் 3 பொ முடியும். நம்மைப் பிரிப்பதற்கு ஒரு பயங்கரமான கருவி இருக்கிறது. புத்:- கருவியா? பொ:- ஆம், அது என் உயிரையே உலகத்திலிருந்து பிரி த்துவிடும். புத்:- எது பொன்னீ! அவ்வளவு பயங்கரமான கருவி? பொன்:- உங்கள் மறதி, புத்:- மறதி, மாநிலத்தில் பகல் வர மறுத்துவிட்டால், மாவீரன் வாளை எடுத்துப்போக மறந்துவிட்டால், மல்லிகை மணம் வீச மறந்துவிட்டால், பொன்னியைப் புத்தன் மறந்து விருவான்! பொ:- அன்பா! என்னைப் பிரியவே மாட்டீர்களே? புத்:- பிரிவதா மணியை வீட்டு ஒலி பிரியுமா? ஆனால் இப் பொழுது மட்டும் ஒரு அவசர வேலை. பொ:- ஆரம்பித்து விட்டீர்களே! புத்:- இல்லை. போனதும் திரும்பிவிடும்வன். பொ:- அப்படி என்ன அவசரம்? புத்:- அரசாங்க சமாச்சாரம். பொ; - அரசாங்கமா! நீங்கள் ....? புத்- அரசகுமாரன். பொ:- அரசகுமாரர்! (தனக்குள்) ஆபத்தான காதல். ஆழந் தெரியாது கால் வைத்துவிட்டேன் அரசகுமாரர்......

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/62&oldid=1702678" இலிருந்து மீள்விக்கப்பட்டது