பக்கம்:ஒரே முத்தம்.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரே முத்தம் புத்:- அதனால் நீரும் மன்னராக நினைத்தீர். விபீ:- பழி, வீண் பழி! 63 புத்:- எது பழி? வரி கொடுக்காதவர்களை வாட்டிக் குவித் தீர்களே அது பழி. இஷ்டத்திற்கு இணங்காத இளம் பெண்க ளின் இருதயத்தில் ஈட்டி பாய்ச்சினீர்களே அது பழி. ஏன் என்று கேட்ட ஏழைமக்களின் வீடுகளை எரித்துச்சாம்பலாக்கினீர்களே அது பழி. (இமயாவைப் பார்க்க) இம: - ஆம்! நான் அப்பொழுதே நினைத்தேன். மகா:- பேசாதீர். ராஜப் பிரதிநிதியாக உம்மை நியமித் தால், உமக்கு ஒரு பிரதிநிதி! உம். இமயா! நீர் இந்தச் சிம்மா சனத்திற்கு ஆசைப்பட்டது உண்மைதானா? இம:- எனக்கு ஆசையில்லை இவர் ஆசைப்படச் சொன் னார். நான் பட்டேன். . விபீஷ:- மகாராஜா தயவு செய்து என் வார்த்தைகளைக் கேளுங்கள். இமயா இன்பபுரிச் சக்ரவர்த்தியாகத் திட்டம் போட்டது உண்மை. மக்களைக் கஷ்டப்படுத்தியது உண்மை. நான் எவ்வளவோ தடுத்து உண்மை நீதி நெறிகளை எடுத்து நீட்டினேன். சாஸ்திர சம்பிரதாயங்களைச் சமர்ப்பித்துக் கெஞ்சி னேன். சட்டத்தைக்காட்டி பயமுறுத்தினேன். இமயா என் வார்த்தைகளுக்குக் காதுகொடுக்கவில்லை. என் உபதேசங்களை அலட்சியப்படுத்தினார். கடவுளாணையாக நான் எந்தக் குற்ற மும் செய்யவில்லை. இந்நாடு, மக்கள் நல்வாழ்வு இவை மூச்சு மகாராஜா! மகா : - சரி சதி வேலைகள் நடத்தியது? . என் விபீஷ:- அதில் நான் சம்மந்தமில்லை. இமயா சதிசெய்தது உண்மை, அதைத் தடுத்துப் பார்த்தேன். கேட்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/65&oldid=1702681" இலிருந்து மீள்விக்கப்பட்டது