பக்கம்:ஒரே முத்தம்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 புத்:- துரோகி! சபை:- துரோகி! துரோகி! ஒரே முத்தம் விபீஷ:- துரோகி! ராகி! ஆலோசித்துப் பேசுங்கள். யார் துரோகி? நிரபராதியான என்னைக் கூண்டில் நிறுத்திவிட்டு, அநீதி பேசுகிற நீங்கள் துரோகிகள்! அரசே! இந்நா நாட்டுச் சட் டப்படிக் கேட்கிறேன். நான் துரோகி என்பதற்கு என்ன ஆதாரம்? புத்:- (சிரித்து) ஆதாரம்! மாணிக்கக் கோட்டையின் காவலன் மாதவனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் சிங்கநகன் உமக்கு எழுதிய உறுதிமொழிப் பத்திரம். எல்லப்பன் தீட்டிக் கொடுத்த கோட்டையின் ரகசிய வழிகள். போதுமா ஆதாரம்? விபீஷ:- சபாஷ்! சரியான ஜோடனை! சக்ரவர்த்தி அவர் களே! இளவரசர் இந்த ஆதாரங்களைக் காட்டிவிட்டு, அதே கையால் என் தலையை வெட்டி எறியட்டும். புத்:- விபீஷணரே! வீணே குதிக்காதீர்: உம்.....குமரி! (குமரி பெட்டியைத் தருதல்) இனி இந்த ஆதாரங்களோடு பேசும். (பெட்டியைத் திறக்கவே விபீஷணனின் பெருஞ் சிரிப்பு) விபீஷ:- பூச்சாண்டி காட்டுகிறார்!ஹஹஹா ! இளவரசே! இரண்டு பொய்க் கடிதங்களாவது தயாரித்து வைத்திருக்கக் கூடாதா? மகா:- . ளவரசனா?....(இளவரசன் திகைப்பு) புத்:- மகாராஜா! கடிதங்கள் கைதவறிவிட்டன. விபீஷ:- ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/66&oldid=1702682" இலிருந்து மீள்விக்கப்பட்டது