பக்கம்:ஒரே முத்தம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஒரே முத்தம் குமரி - நாம் இருவர் சென்றால் போதுமல்லவா? புத்த:- நீ வேண்டியதில்லை. நான் மட்டும் போகிறேன். குமரி:- நான் வருவதால், உங்களுக்கு இடையூறு இல்லையே? புத்த:- இருக்கிறது. குமரி - விபீஷணன் விஷயமாகத்தானே பயணம்.....? புத்த:- இன்னும் ஏதாவது இருக்கும். குமரி:- ரகசியமாக்கும்..... ? புத்த தேவையில்லாத கேள்வி குமரி:- வலுவில் வருகிற துணையை, வேண்டாமென்று தடுப்பது......? புத்த: தடுப்பது சுயநலம். தடுத்தும் கேளாதது? குமரி:- என் சுயநலம். இளவரசே! நீங்கள் தனியயாகச் சென்றால், எனக்கு நிம்மதி இருக்காது. புத்த:- நல்ல கதை. 0 குமரி:- கதையல்ல, வாழ்வெல்லாம் உங்களுக்குத் தொண்டாற்ற நான் காணும் கனவு. புத்த:- கனவு கனவாகவே இருக்கட்டும். 0 குமரி:- என்னைப் புறக்கணிக்கிறீர்கள். புத்த: உன்னையல்ல, உன் எண்ணத்தை. குமரி:- என் எண்ணம்! அது ஆலகாலமா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஒரே_முத்தம்.pdf/70&oldid=1702686" இலிருந்து மீள்விக்கப்பட்டது